Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களே..! இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு... அதுவும் மாதம் ரூ.70,000 சம்பளத்தில்.... மிஸ் பண்ணீடாதீங்க…

Gowthami Subramani [IST]
மாணவர்களே..! இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு... அதுவும் மாதம் ரூ.70,000 சம்பளத்தில்.... மிஸ் பண்ணீடாதீங்க…Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு வகையான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான (Tamilnadu Aadi Dravidar Housing & Development Corporation Limited - TAHDCO) நிறுவனம், மாணவர்களுக்கு இலவசமாக Medical Coding Training-ஐ குறுகிய கால பயிற்சியாக அளித்து, மேலும் சான்றிதழை வழங்குகிறது.

மேலும், இதன் நோக்கம் பயிற்சி முடித்த பின்னர், மருத்துவத் துறை சார்ந்த மென் பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி பெற தேவையான தகுதிகள்

TAHDCO வழங்கும் Free Medical Coding Training-ற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் கட்டாயம் இளங்கலை அறிவியல் (Life Science) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கல்வி ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி நடைபெறும் காலம்

மேலே கூறப்பட்ட தகுதியுள்ள மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக 3 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கான கட்டணத் தொகை

இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத் தொகையாக ரூ.15,000-ஐ TAHDCO நிறுவனம் வழங்கும்.

பயிற்சிக்கான சான்றிதழ்

பயிற்சி முடிந்த பின், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், அதில் தேர்வு பெற்ற தகுதியானவர்களுக்கு ISO – International Organisation for Standardization தரத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இந்தப் பயிற்சியில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு வைக்கப்படும்.

பின்னர், நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 100% மருத்துவத் துறையைச் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

அது மட்டுமல்லாமல், வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்த படியே அந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.

ஊதியத் தொகை

நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலான ஊதியத் தொகை வழங்கப்படும்.

அதன் பின்னர், மாணவர்களின் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை அளவிலான ஊதியத் தொகை வழங்கக்கூடிய பதவி உயர்வு வழங்கப்படும். இதனை மிகவும் குறுகிய காலத்தில் மாணவர்கள் பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

TAHDCO இலவச பயிற்சிக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Free Medical Coding Training TAHDCO | Free Medical Coding Training TAHDCO Online | Medical Coding Training with Placement TAHDCO | TAHDCO Subsidy Details | Free Medical Coding Training TAHDCO Erode | Free Medical Coding Training TAHDCO Online | Free Medical Coding Training TAHDCO in Coimbatore | Free Medical Coding Training TAHDCO in Tamil | Medical Coding course Online | Medical Coding books Online Free | Online classes for Medical Billing and Coding with Free Laptop | Free Medical Coding Training in Chennai | Medical Coding Training and Placement in Chennai | Free Medical Coding Training in Chennai | Medical Coding Training fees in Chennai | Government approved Medical Coding Course | Medical Coding Course Duration and Fees | Medical Coding course Fees in Tamilnadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்