Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளிகளில் உங்க குழந்தைக்கு இலவச சீட் கிடைக்கணுமா… இப்படி பண்ணுங்க…

Gowthami Subramani [IST]
தனியார் பள்ளிகளில் உங்க குழந்தைக்கு இலவச சீட் கிடைக்கணுமா… இப்படி பண்ணுங்க…Representative Image.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றும் பெற்றோர்களின் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இதில் முக்கியமான ஒன்று ஒன்றாம் வகுப்பு முதலே ஒரு சில பள்ளிகள் அதிக அளவிலான கட்டணங்களை வசூலிக்கின்றன. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், எப்படி பொருளாதார நலிவடைந்தோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் கல்வியில் சேர்க்க முடியும்..

ஆர்டிஇ

தமிழ்நாட்டில், கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் (Right To Education - RTE) தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், 25% வரையிலான இட ஒதுக்கீட்டில் குழந்தைகள் இலவச கல்வியைப் பெறுவர்.

தனியார் பள்ளிகளில் மட்டுமா?

தமிழகத்தில், தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள் போன்றவற்றில் இந்த கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி, இதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகள் LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் சேரலாம்.

இந்த சட்டத்தின் கீழ், பள்ளிகளில் சேர்வதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலங்களின் மூலம் பெறப்படும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில், குழந்தைகளுக்கான பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கு இணையதளம் மூலமாகவும், அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்தப் பதிவில், இணையதளத்தில் எப்படி நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

படி 1

முதலில் இதில், விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்:  www.rte.tnschool.gov.in

படி 2

பிறகு, அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் படி, மாணவரின் பிறப்பு சான்றிதழ், மாணவரின் புகைப்படம், பெற்றோர்களின் அடையாளச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்,

மேலும், மாணவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின், அதற்கான சான்றிதழையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

படி 3

இவ்வாறு அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த பக்கத்தில் இருக்கும் Start Application என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, அதில் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். பிறகு ஆவணங்களைக் கவனமாக நிரப்ப வேண்டும்.

படி 4

இவ்வாரு தனிப்பட்ட தகவல்களை நிரப்பிய பிறகு, உங்களுக்கான தனிப்பட்ட கடவுச் சொல்லை நிரப்ப வேண்டும். இதனைத் தொடர்ந்து Save என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின், ஒரு Application No ஒன்று வரும். அதனை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்திலேயே Click Here to Login என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

படி 5

இவ்வாறு க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், குறித்து வைத்துக் கொண்ட Application No-ஐயும், Password-ஐயும் நிரப்பி Login செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, நமக்கு Dashboard திறக்கப்படும்.

படி 6

இதனைத் தொடர்ந்து திறக்கப்படும் பக்கத்தில், பெற்றோர்களின் தகவல்கள், முகவரி குறித்த விவரங்களை உள்ளிட வேண்டும். இவ்வாறு நிரப்பும் சமயத்தில் அதற்கேற்ற ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படி 7

இவ்வாறு அப்லோடு செய்யப்படும் ஆவணத்திற்கு சில விதிமுறைகள் உண்டு.

அதன் படி, மாணவரின் புகைப்படம் கண்டிப்பாக 100Kb அளவிற்குள்ளும், JPG Format-ல் இருக்க வேண்டும்.

மேலும், பிறப்புச் சான்றிதழ், முகவரி அட்டை, பெற்றோர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் 1Mb அளவு மற்றும் JPG Format-ல் இருக்க வேண்டும்.

இந்த குறிப்பிடப்பட்ட அளவுகளில் ஆவணங்களை எடுத்துக் கொண்டு பின் விண்ணப்பிக்க வேண்டும்.

படி 8

மேற்கூறிய அளவுகளில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, Save என்பதைக் க்ளிக் செய்யவும். பிறகு, நீங்கள் அப்லோடு செய்த உங்களுடைய முகவரியின் அடிப்படையில், உங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளின் பெயர்கள் திரையில் காண்பிக்கப்படும். இவற்றில் உங்களுக்கு விருப்பமான பள்ளியைத் தேர்ந்தெடுத்து, Save என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்,

படி 9

இறுதியாக Preview பார்த்து, விண்ணப்பத்தைச் சரிபார்க்க வேண்டும். சரியாக இருப்பின், Submit என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விடும். மேலும், உங்களுடைய Application-ஐப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு, அதில் இணைக்கப்பட்ட ஆவணங்களின் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு, அப்ளிகேஷன் படிவத்துடன் பள்ளிகு நேரில் சென்று படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: இவ்வாறு, ஒவ்வொரு Application ஆக நிரப்பிய பிறகு, அதிகபட்சம் ஐந்து பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

RTE Online Admission Date 2022-23 | RTE TN Admission 2022-23 Online Date | RTE up Admission 2022-23 Online Date | RTE Tamilnadu Admission 2022-23 Online Date | RTE Tamilnadu Admission 2022-23 Online Date | RTE Tamilnadu Admission 2022-23 Online Date | RTE TN Admission 2022-23 Online Date Tamil | RTE up Admission 2022-23 Online Date in Tamil | RTE Admission 2022-23 cg Online Date | RTE 25 up Admission 2022-23 Online Date | www RTE tnSchools gov in Admission 2022 | RTE Admission 2022 23 tamil nadu last Date | RTE apply Online 2022 23 | RTE tamilnadu Admission 2022 23 | RTE up Admission 2022 23 Online Date | How to get free Admission in Private School | How to get in Private School | How to get free seat in Private School | How to apply free education in Private School | Can my child go to Private School for free | How does Private School cost


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்