Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Higher Education Students Benefits: மாணவர்களே..! உயர்கல்வி படிப்பதற்கான ஸ்காலர்ஷிப்...! இந்த வாய்ப்ப தவற விட்ராதீங்க….!

Gowthami Subramani June 22, 2022 & 18:30 [IST]
Higher Education Students Benefits: மாணவர்களே..! உயர்கல்வி படிப்பதற்கான ஸ்காலர்ஷிப்...! இந்த வாய்ப்ப தவற விட்ராதீங்க….!Representative Image.

Higher Education Students Benefits: மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்காக, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஸ்காலர்ஷிப் தொகை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றன. அந்த வகையில், SEEEDS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மாணவ- மாணவியர்களுக்கு உயர் கல்வி கற்பதற்காக உதவித் தொகை வழங்கி வருகிறது. அதே போல, இந்த 2022 ஆம் ஆண்டும் ஸ்காலர்ஷிப் உதவுத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது (Student Benefits Schemes for Higher Education).

இந்த ஸ்காலர்ஷிப்பில் சேர்வதற்கு மாணவ மாணவியர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உதவுத்தொகை, விண்ணப்பிப்பதற்கான நேரம் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் இதில் காணலாம் (Government schemes for students 2022).

SEEEDS நிறுவனம் (Higher Education Students Benefits)

SEEEDS நிறுவனம் என்பது, மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்காக உதவக்கூடிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இதன் மூலம், கீழ்க்கண்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயன் பெறலாம் (SEEEDS Foundation Benefits).

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் உதவித் தொகை பெறுவர்.

இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள்

பின் தங்கிய சமூக மற்றும் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் (Student Benefits Scheme)

ஆதரவற்ற அல்லது அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகள் போன்றோர்.

மேற்கூறிய பின்னணியில் இருந்து கீழ்க்கன்ட படிப்புகளில் தேர்ச்சி பெறும் 2022 ஆம் ஆண்டில் மாணவ, மாணவியர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர்கள்.

தகுதி வரம்பு (Central Sector Scheme of Scholarship for College and University students)

SEEDS நிறுவனத்திலிருந்து உதவித் தொகை பெறும் மாணவ, மானவியர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சேர விரும்பும் படிப்புகள் மற்றும் ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான தகுதி வரம்பு (Higher Studies Scholarship for Students in Tamil)

12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சேர விரும்பும் படிப்புகள்

பெற்றிருக்க வேண்டிய தகுதி (Eligibility for School Students Scholarships)

பொறியியல்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 600 மதிப்பெண்களில் 480-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

கட்-ஆஃப் (Cut off) 200-க்கு 180-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

மருத்துவம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற போதுமான நீட் (NEET) மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 480-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் (Government Schemes for Students 2022)

துணை மருத்துவ படிப்புகள்

200 கட் ஆஃப்-க்கு (Cut off) 180-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருத்தல்

கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகள்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 600-க்கு 480-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

 

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு,

லேட்டரல் என்ட்ரி (For Lateral Entry)

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 350-க்கும் அதிகமான மதிப்பெண்களைக் கொண்டிருத்தல் (Scholarship for Lateral Entry Students in Tamil)

பாலிடெக்னிக் டிப்ளமோவில் 80-க்கும் அதிகமான மதிப்பெண்களைக் கொண்டிருத்தல்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் 10 ஆம் வகுப்பு மாணவ – மாணவியர்கள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 350-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் (Scholarship for Poor Students 2022 in Tamil).

முக்கிய தேதிகள்

ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பம் தொடங்கப்படும் தேதி – ஜூன் 20, 2022

விண்ணப்பம் முடிவடையும் தேதி – ஜூலை 20, 2022

வின்ணப்பிக்க வேண்டிய முகவரி (How to Apply Scholarships for Students Higher Studies)

இந்த ஸ்காலர்ஷிப் தொகைப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

https://www.seeeds.org/scholarship

மின்னஞ்சல் முகவரி

admissions@seeeds.org

மாணவ, மாணவியர்கள் இந்த அற்புத வாய்ப்பைப் பயன்படுத்தி, மேலே கூறப்பட்ட இணையதள முகவரிக்கு குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்