Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of Ambedkar

Gowthami Subramani Updated:
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image.

குடியரசு தினத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். நாடெங்கும் ஒலிக்கும் சட்டத் திருத்தத்திற்கு அடிக்கல் நாட்டியவர். ஏழை, எளிய தாழ்த்தப்பட்டோர்களின் வாழ்விற்காக, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். தன்னுடைய வாழ்வில் சந்தித்த இன்னல்களை இனி எவரும் சந்திக்கக் கூடாது என்பதற்கு கடும் போராட்டத்திற்கு மத்தியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர். இந்த மாபெரும் சிறப்பு மிக்க சட்டமேதை அம்பேத்கர் அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

அம்பேத்கர் பிறப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் மாவ் என்னும் ஊரில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராம்ஜி மாலோஜி மற்றும் பீமாபாய் ஆவார். இவருடைய இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி என்பதாகும். இவர்கள், மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்துல்கலாமின் தந்தை இராணுவப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

பள்ளிப்படிப்பு

பீமாராவ், சாத்தாரா என்ற பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். ஆனால், பள்ளியில் படிக்கும் போதே தாழ்த்தப்பட்டப் பிரிவினைச் சார்ந்தார் என்ற காரணத்திற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். அதாவது, தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்கள் மற்ற மாணவர்களோடு ஒன்றாக அமரக் கூடாது, விளையாடக் கூடாது, அவர்கள் நீர் அருந்தும் பாத்திரத்தில் நீர் குடிக்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த இன்னல்கள் அனைத்தையும் சந்தித்து, பிறகு தனது ஆரம்ப கல்வியினை முடித்தார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

அம்பேத்கர் பெயர் வரக் காரணம்

பீமாராவ் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், அம்பேத்கர் என்ற ஆசிரியர் இருந்தார். ஆசிரியர் அம்பேத்கர், பீமாராவ் மீது அதிக அன்பு செலுத்தி வந்தார். அதே நேரத்தில், பீமாராவும் ஆசிரியர் மீது கொண்ட அன்பினால் பெற்றோர் வைத்த பீமாராவ், ராம்ஜி பெயருகுப் பின்னால், ஆசிரியர் பெயரான அம்பேத்கர் பெயரையும் இணைத்து கொண்டார். ஆனால், இன்று வரை பீமாராவ் என்று கூறுவதை விட, அம்பேத்கர் என்ற பெயரிலேயே அம்பேத்கர் அடையாளம் காணப்படுவார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

கல்வி ஆர்வம்

அம்பேத்கர் கல்வியில் ஆர்வம் காட்டியதுடன், அப்பாவின் துணையுட, ஹோவர்ட் ஆங்கிலப் பாடநூலைக் கற்றார். இவர், மேலும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார். இதில், நல்ல தேர்ச்சி பெற்றதுடன், நூல்கள் படிப்பதில் இவருடைய ஆர்வம் மிகுந்தது. அம்பேத்கர் பாட நூல்களைப் படிப்பதை விட, மற்ற நூல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 1907 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில், தேர்ச்சி பெற்றார். அந்த சமயத்தில், தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. இந்த சாதனையைப் பெருமைப்படுத்தும் விதமாக, அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

வெளிநாடு சென்று படித்த முதல் இந்தியர்

அம்பேத்கர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்ட பின், பரோடா மன்னரின் அரசவையில் படைத்தலைவராக இருந்தார். அங்கு பல இன்னல்களைச் சந்தித்த அவர், படைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பரோடா மன்னர், அம்பேத்கரைச் சந்தித்து அவருடைய இன்னல்களை அறிந்து கொண்ட பின், அம்பேத்கரின் கல்வியை மேம்படுத்துவதற்கு உதவினார்.

அதன் படி, அம்பேத்கரை வெளிநாடு அனுப்பி முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதன் படி, வெளிநாடு சென்று படித்த முதல் இந்தியர் பிஆர். அம்பேத்கர் ஆவார். இவ்வாறு, முதுகலைப் படிப்பிற்காக, அமெரிக்காவிற்குச் சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளைப் படித்து முதுகலைப் படிப்பை முடித்தார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

சமூகப்பணியில் இறங்கிய நேரம்

இவ்வாறு அம்பேத்கர் முதுகலைப்படிப்பை முடித்த பிறகு, நாடு திரும்பினார். பிறகு நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய அமைப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான போராட்டங்களை மேற்கொண்டார். இந்த போராட்டத்தின் மூலம், தீண்டாமை, சாதி வன்கொடுமை போன்றவற்றை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

அரசியல் சாசனத்தின் உருவம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் டாக்டர் பிஆர் அம்பேத்கர். நம் நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு, அப்போதைய குடியரசுத் தலைவராக விளங்கிய நேரு, அம்பேத்கரை நியமித்தார். இதற்கு காந்தியடிகள் சம்மதித்த பிறகு, அம்பேத்கருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பதவி வழங்கப்பட்டது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு! | History of AmbedkarRepresentative Image

இரவு பகல் பாராமல்

பதவி பெற்ற பிறகு, இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையிலே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த அம்பேத்கர், தகுந்த சட்டப் பாதுகாப்பை மக்களுக்கு வழங்குவதில் கவனமாக இருந்தார். இவரது சட்ட அமைப்பின் மூலம், பல்வேறு சட்டங்களை உருவாக்கி, தாழ்த்தப்பட்டோர்களின் நலனுக்காக உத்தரவாதம் வழங்கினார்.

அதே சமயம் அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை. “ஊரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு போன்றவற்றால் தான் பாதுகாக்கப்படுகின்றன” என்பது. இவ்வாறே புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கி அதனை அரசியல் நிர்ணய சபையிடம் அம்பேத்கர் ஒப்படைத்தார். அதன் பிறகு, நவம்பர் 26 ஆம் நாள், இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்