Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைனிலேயே சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்…! ரூ.60 மட்டும் போதும்...

Gowthami Subramani July 28, 2022 & 20:00 [IST]
ஆன்லைனிலேயே சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்…! ரூ.60 மட்டும் போதும்...Representative Image.

How to Apply for OBC Certification Online in Tamil: ஆன்லைனில், ஓபிசி சான்றிதழ் பெறும் முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு ரூ. 60 மட்டும் இருந்தாலே போதும். ஆன்லைனில் சுலபமாக வீட்டில் இருந்தபடியே ஓபிசி சான்றிதழைப் பெற முடியும்.

OBC சான்றிதழ் என்றால் என்ன?

தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் பெறுபவர்கள் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்தகைய சான்றிதழ்களை வைத்து அவர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, அல்லது மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஓபிசி சான்றிதழ் முக்கியமகிறது. இதனை, இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என அழைக்கப்படும்.

OBC சான்றிதழ் பெறுவது எப்படி?

OBC சான்றிதழ் பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு இ-சேவை மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • இ-சேவை அங்கீகரிக்கப்பட்ட தளம்: https://www.tnesevai.tn.gov.in/
  • இந்த சேவையைப் பயன்படுத்துபவர்கள், கட்டாயம் அதில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • இவ்வாறு இ-சேவை இணையதளத்தில் பதிவு செய்த பின், அவர்களுக்கு Login மற்றும் Password வழங்கப்படும்.
  • இந்த Login மற்றும் Password-ஐ வைத்து சான்றிதழ் பெற நினைப்பவர்கள் உள்நுழையலாம். மேலும் இதில், உள்நுழைய சிட்டிசன் Login செய்ய வேண்டும். இதற்கு CAN-ல் பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். CAN எண்ணை வைத்து உள்நுழைந்த பின், சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அதன் பிறகு, புதிதாகத் தோன்றிய அந்த பக்கத்தில் Services என்பதைக் க்ளிக் செய்தால், Department Wise என்று இருப்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு, Department Wise-க்குக் கீழ் இருக்கும் Revenue Department என்பதைக் க்ளிக் செய்து கொள்ளவும்.
  • இந்த Revenue Department பக்கத்தின் கீழ், REV-115-ல் Other Backward Class (OBC) Certificate என்று இருக்கும். அதனைக் க்ளிக் செய்து உள் நுழைய வேண்டும்.
  • அதன் பின், புதிதாக தோன்றிய இந்த பக்கத்தில், Proceed என்பதைக் க்ளிக் செய்து கொள்ளலாம்.
  • இந்தப் பதிவில், CAN- எண்ணை பதிவு செய்வது மிக அவசியம் ஆகும்.
  • அடுத்து Proceed என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்த பின்னர், விண்ணப்பப் படிவம் திறக்கப்படும்.
  • பின், அந்தப் படிவத்தில் Personal Details-ல் Hindu என தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், Hindu ஆப்ஷனுக்குக் கீழ் இருப்பதில் உங்களுக்கான சாதியினைச் செலெக்ட் செய்ய வேண்டும்.
  • அதே பக்கத்தில் Occupation Group-ல் Student என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • பின், Status of Father என்பதில் Yes/No-ல் சரியானவற்றை டிக் செய்து, அவர்களின் தொழில் முகவரியினைச் சரியாக பதிவிட வேண்டும்.
  • மேலும், இது போன்றே Mother ஆப்ஷனிற்கும் விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அடுத்ததாக, Declaration என்பதில் டிக் செய்து Submit என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஓபிசி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்

  • Photo
  • Any Address Proof
  • Community Certificate
  • Self Declaration of Applicant

இதில், Self Declaration of Applicant என்பதில், உங்களுக்குரிய விவரங்களைக் கொண்ட ஒரு விண்ணப்பப் படிவத்தை எடுத்துக் கொண்டு அதில், விவரங்களை உள்ளிட்டு அப்லோடு செய்யக்கூடிய முறையில் இருக்கும்.

பிறகு, மற்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ள இடத்தில் போட்டோ, வகுப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்.

இவ்வாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த பின், விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். அதற்கு Make Payment-ல் உள்ள Service Charges என்பதில் ரூ.60 இருக்கும்.

அதற்கு I agree என்ற கட்டத்தில் டிக் செய்து, பின் Make Payment-ஐக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றிற்குப் பின், Application Number ஒன்று கிடைக்கும். அதனை டவுன்லோடு செய்து பின், வெப்சைட்டை லாகின் செய்ய வேண்டும்.

இதில் கிடைத்த Application Number-ஐப் பயன்படுத்தி Check Status என்பதக் க்ளிக் செய்து உறுதி செய்து கொள்ளலாம். அதில் Approved ஆன பிறகு, ஆன்லைன் மூலமாகவே, சான்றிதழை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Apply community Certificate Online in Tamil | How to Apply OBC Certificate Online in Tamilnadu | OBC Certificate Download | TNega | OBC Certificate Apply Online Tamilnadu | OBC Certificate Apply documents | How to Apply OBC Certificate Online in Tamilnadu Tamil | TN e-sevai Application Status | OBC Certificate Download | TNega | OBC Certificate Apply Documents | TN e-sevai Application Status | OBC Certificate Status Check | OBC Certificate Eligibility in Tamilnadu | OBC Certificate Status Check Tamilnadu | OBC Certificate Meaning in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்