Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Nativity Certificate in Tamil: இருப்பிடச் சான்றிதழ் வாங்குவது எப்படி..? இந்த முறைகளைப் ஃபாலோப் பண்ணுங்க…

Gowthami Subramani [IST]
How to Apply Nativity Certificate in Tamil: இருப்பிடச் சான்றிதழ் வாங்குவது எப்படி..? இந்த முறைகளைப் ஃபாலோப் பண்ணுங்க… Representative Image.

How to Apply Nativity Certificate in Tamil: தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்றிதழ் வாங்கும் முறைகளையும், விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இருப்பிடச் சான்றிதழ் (How to Apply for Nativity Certificate)

இருப்பிடச் சான்றிதழ் அல்லது நேட்டிவிட்டி சான்றிதழ் என்பது, ஒரு நபர் குறிப்பிட்ட இடத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக வசிக்கிறார் என்பதை மாநில அரசுகளால் சான்றிதழாக வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். இது பல்வேறு வகையான பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது முதல் வேலை வாய்ப்பு நோக்கங்கள் மற்றும் வேலை செய்யும் இடத்திலும் தேவைப்படும் ஒரு ஆவணமாக இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்தப் பதிவில், நம் தமிழ்நாட்டில் எப்படி இருப்பிடச் சான்றிதழைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்றிதழ் பெற தகுதி

தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்றிதழ் பெற தகுதிகளாக, தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமாக இருக்க வேண்டும்.

இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

ஒரு தனிநபருக்கான இருப்பிடச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (What are The Documents Required to Apply Nativity Certificate).

  • ஏதேனுமொரு அடையாள சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • பிறப்பு சான்று
  • பள்ளி சான்றிதழ் அல்லது வேலை வாய்ப்பு விவரங்கள் அல்லது 5 ஆண்டுகள் வசிப்படத்திற்கான ஆதாரம்
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் – 2

இவற்றுள், அடையாளச் சான்றாக ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் (How to Apply Nativity Certificate in Offline).

இருப்பிடச் சான்றிதழை விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள்

இருப்பிடச் சான்றிதழ் அல்லது நேட்டிவிட்டி சான்றிதழ் பெற கீழே கொடுக்கப்பட்டவற்றைப் பின்பற்றவும் (Nativity Certificate Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் தாசில்தார் அலுவலகத்திற்குப் பார்வையிட வேண்டும்.
  • இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பப் படிவத்தை பெறுவதற்கு, தாசில்தார் அலுவலகம் அல்லது வருவாய்த்துறை அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் (Nativity Certificate Application Form).
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும். மேலும், சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்தலுடன், தேவையான ஆவணங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து 2-3 வாரங்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு முறை பெற்றுக் கொள்ளும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Iruppida Santrithal Apply Online | How to Apply Nativity Certificate in Tamilnadu Online | How to Apply Nativity Certificate Online | How to Apply Nativity Certificate Online in Kerala | How to get Nativity Certificate in Tamilnadu | How to Apply Nativity Certificate Online in Tamilnadu | How Can I Get Nativity Certificate Online in Tamilnadu | Income Certificate Apply Online Tamil | CAN number for Nativity Certificate | How to Apply Nativity Certificate Online in Tamil | Nativity Certificate Download | Nativity Certificate Status | இருப்பிட சான்றிதழ் Online Apply | இருப்பிட சான்றிதழ் Format


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்