Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாடு முழுவதும்.. 18 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள்.. இன்று நீட் தேர்வு!!

Sekar July 17, 2022 & 11:19 [IST]
நாடு முழுவதும்.. 18 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள்.. இன்று நீட் தேர்வு!!Representative Image.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமல்லாது தமிழ் உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

மொத்தம் 18,72,329 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், 10,64,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் 18 நகரங்களில் 1,42,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளது.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹால் டிக்கெட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் வண்ண புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து மாணவர்களும் ஆள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்திற்குள் உள்ளே வர வேண்டும் எனவும், மதியம் 1.30 மணிக்கு மேல் நுழைவாயில் மூடப்பட்டு அதற்கு பிறகு வரும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை அசல் ஆவணத்தை கொண்டு வர வேண்டும். மாணவர்களின் வருகை முழுக்க முழுக்க பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்