Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்…!

Gowthami Subramani September 12, 2022 & 10:30 [IST]
கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்…!Representative Image.

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் இயங்கக் கூடிய கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் படி, இந்த கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான B.V.SC மற்றும் A.H உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த படிப்பு ஐந்தரை ஆண்டு கால படிப்பாக கற்பிக்கப்படுகிறது.

அதே போல, உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் , கோழியின தொழில்நுட்பம் போன்ற B.TECH படிப்புகள் நான்கு ஆண்டு காலமாக உள்ளது. இந்த ஆண்டு, B.V.SC, A.H மற்றும் B.TECH படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, மேலே கூறப்பட்ட படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று அதாவது செப்டம்பர் 12 ஆம் நாள் காலை 10 மணி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்