Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கால்நடை படிப்பிற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்.. முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani September 16, 2022 & 19:40 [IST]
கால்நடை படிப்பிற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்.. முழு விவரங்களும் இங்கே…!Representative Image.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு, மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிடப்பட்ட நேரம் வழங்கப்படும். இந்தப் பதிவில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி காண்போம்.

அதன் படி, நடப்பு ஆண்டான 2022-23 ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12, 2022 ஆம் நாள் முதல் செப்டம்பர் 26 ஆம் நாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது.

மேலும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (B.Tech – Poultry Technology), உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு (B.Tech – Food Technology), மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech – Diary Technology) போன்ற பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • வகுப்புச் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • 12 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட்
  • முதல் தலைமுறை பட்டதாரி என்றால் அதற்கான சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு போட்டோ
  • பள்ளிச் சான்றிதழ்
  • தமிழ் வழியில் படித்திருப்பின், அதற்கான EMIS எண்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை

  • முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், Under Graduate Admission என்பதைக் க்ளிக் செய்து, அதன் பின் வரும் பக்கத்தில் Apply என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என்று Select செய்யுமாறு இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதனைக் க்ளிக் செய்து, ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
  • பின், அப்ளை செய்வதற்கு முன்னர் அந்தப் பதவிக்கான Instructions, Notification, மற்றும் Prospectus உள்ளிட்டவற்றைப் படித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, New User என்பதைக் க்ளிக் செய்து, Register என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில், உங்களுடைய தொலைபேசி எண் கேட்கப்படும். அவற்றை அந்தப் பக்கத்தில் உள்ளிட்ட பின் OTP கிடைக்கும். பிறகு, OTP-ஐ உள்ளிட்டு, இமெயில் ஐடி கேட்கப்படும். பிறகு அதனையும் உள்ளிட்டு Submit என்பதைக் க்ளிக் செய்தால், Account உருவாகி விடும்.
  • அதன் பிறகு, Message என்ற ஆப்ஷன் வரும். இதற்கு Ok எனக் கொடுத்த பின், அப்ளை செய்வதற்கான படிநிலைகள் தொடங்கும்.
  • முதலில் மாணவர்கள் படிக்க விரும்பக் கூடிய Course-ஐத் தேர்வு செய்ய வேண்டும்.
  • பின், அந்த Course உள்ள கல்லூரிகள் போன்றவற்றையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பின், வகுப்புச் சான்றிதழ் (Community Certificate) என்பதைத் தேர்வு செய்து, சான்றிதழைப் பதிவேற்றம் செய்து Save & Next என்பதைக் கொடுக்கவும்.
  • இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களான, பெயர், பிறந்த இடம், முகவரி, பெற்றோர் விவரங்கள், அலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களையும் Upload செய்ய வேண்டும்.
  • இத்துடன், மாணவர்கள் தங்களது புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பிறகு, மாணவர்கள் கல்வி குறித்த விவரங்களை உள்ளிடுவதுடன், அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு மீண்டும், Save and Next என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து, மாணவர்கள் படித்த பள்ளி விவரங்கள், EMIS எண் போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள் எந்த மொழியில் படித்தனர் என்ற விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
  • இவ்வாறு செய்த பிறகு, Save & Next கொடுக்க வேண்டும். பிறகு, அதில் Special Category-ஐ தேர்ந்தெடுக்கச் சொல்லிக் கேட்கும். இதில், சரியான Category இருப்பின் தேர்வு செய்யலாம். இல்லையெனில் எதையும் தேர்வு செய்யத் தேவையில்லை.
  • பிறகு, Application-ஐ சேமித்து Preview என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். Preview பார்க்கும் போது ஏதேனும் தவறுகள் இருப்பின், அதனை அப்போதே சரி செய்து கொள்ளலாம்.
  • பின் அதனைச் சரிபார்த்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். இதில் சரிபார்த்த பிறகு, Proceed to Payment என்பதைக் க்ளிக் செய்தால், இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பத்திற்கான கட்டணங்களைச் செலுத்தலாம்.
  • அதன் படி, கால்நடை மருத்துவப் படிப்பிற்கு பொது பிரிவினருக்கு ரூ.700 வசூசிக்கப்படுகிறது. மேலும், SC, ST, SCA உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.350 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது.
  • மற்ற படிப்புகளுக்கு SC, ST, SCA போன்ற பிரிவினருக்கு ரூ.600-உம், மற்ற பிரிவினருக்கு ரூ.1,200 உம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • இதில், ஒருவர் இரண்டு பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட முறைகளின் மூலம், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்