Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு துறை எச்சரிக்கை..

Nandhinipriya Ganeshan Updated:
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு துறை எச்சரிக்கை.. Representative Image.

வருகின்ற திங்கட்கிழமை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 3185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில், பொதுதேர்வில் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

  • தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.
  • பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
  • காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றி எழுதுததல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். 
  • ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 

அத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுக் காலங்களில் மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383081, 9498383075 என்ற எண்ணில் இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம்.  

தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்