Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get First Graduate Certificate in Tamilnadu Online: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..? முழு விவரங்களும் இங்கே….!

Gowthami Subramani June 26, 2022 & 12:15 [IST]
How to Get First Graduate Certificate in Tamilnadu Online: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..? முழு விவரங்களும் இங்கே….!Representative Image.

How to Get First Graduate Certificate in Tamilnadu Online: மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் ஒரு முயற்சியே முதல் பட்டதாரி உதவித்தொகை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய முதல் பட்டதாரி உதவித்தொகை பற்றியும் இதனைப் பெறும் முறைகளையும் பற்றி காண்போம் (How to Get First Graduate Certificate in Tamilnadu Online).

பயன்கள் (First Graduate Certificate Benefits)

இந்த அருமையான திட்டத்தின் மூலம், படிக்காத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில்வதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், குறைந்த நிதி நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக அமையும் (First Graduate Certificate details in Tamil).

முக்கிய தகவல்கள்

திட்டத்தின் பெயர்

முதல் பட்டதாரி உதவித்தொகை (First Graduate Scholarship)

பயன் வழங்குபவர்

தமிழ்நாடு அரசு

பயன் பெறுபவர்

மாணவ, மாணவிகள்

நன்மைகள்

உதவித் தொகை

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்

tnedistrict.tn.gov.in

 

உதவித்தொகை பெறுவதற்கான தகுதி (First Graduate Certificate Eligibility)

தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை பெறும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • TNEA அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (How to Apply First Graduate Scholarship in Tamilnadu).
  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் இருப்பிட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் (How to Apply for First Graduate Certificate in Tamilnadu).
  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் குடும்ப வருமானத்திற்கான வரம்பு எதுவும் இல்லை.

உதவித்தொகை

முதல் பட்டதாரி பெறக்கூடிய உதவித்தொகை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (How to Apply First Graduate Certificate Online in Tamilnadu).

Day-Scholar

ஆண்டுதோறும் ரூ. 25,000/-

Hosteller

ஆண்டுதோறும் ரூ. 25,000/-

 

தேவையான ஆவணங்கள் (What are The Documents Needed for First Graduate Certificate in Tamilnadu)

இதில், உதவித்தொகை பெறக்கூடிய நபர்கள் கீழே குறிப்பிட்ட ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை வைத்திருக்க வேண்டும்.

  • வருமான ஆதாரம்
  • கல்வி சான்றிதழ்கள்
  • புகைப்பட அடையாள சான்று (Photo ID Proof)
  • பாஸ்போர்ட் அளவு போட்டோ
  • கையெழுத்து
  • 10 ஆவது சான்றிதழ்
  • சேர்க்கை சீட்டு
  • பிற குறிப்பிடத்தக்க சான்றிதழ்கள்

முதல் பட்டதாரி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் (First Graduate Certificate Online Apply)

  • தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க tnedistrict.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதில் உள்ள அறிவிப்பின் படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதன் படி, இதன் முக்கியமான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, தேவைப்பட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
  • அதன் பின், சமர்ப்பி என்பதை க்ளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஆனால், விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வதும் அவசியம்.
  • அதன் படி, இந்த விண்ணப்பத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக அச்சிட வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்