Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,446.43
-425.86sensex(-0.58%)
நிஃப்டி22,290.55
-115.05sensex(-0.51%)
USD
81.57
Exclusive

பிங்கலி வெங்கையாவின் ஆர்வமும், இந்தியாவின் மூவர்ணக் கொடி வரலாறும்..!

Gowthami Subramani August 11, 2022 & 15:35 [IST]
பிங்கலி வெங்கையாவின் ஆர்வமும், இந்தியாவின் மூவர்ணக் கொடி வரலாறும்..! Representative Image.

இன்று, நேற்று என இல்லாமல், வரலாற்றில் ஒரு மாபெரும் தனிச்சிறப்பை விளங்குவது கொடி. ஒரு மனிதன் ஒரு குழுவோடு அல்லது சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டான். அந்த வகையில், இவ்வாறு உருவாக்கப்பட்ட அடையாளங்கள், அவர்களுக்குள் ஒற்றுமையைத் தருவதாகவும் அமைகிறது. மேலும், பிற சமூகத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு முக்கியமானதாக அமைந்தது கொடி ஆகும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை ஒருங்கிணைத்தவாறு அமையும், நம் நாட்டின் தேசிய கொடி உருவான வரலாறு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்தியாவின் சுதந்திரம்

ஆண்டாண்டு காலமாக நாம் அனைவரும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியா இருந்த காலம், மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது போல உணர்வைத் தந்தது. நம்மை அடிமைப்படுத்தி, நம்முடைய பொருளாதாரத்தை சூரையாடி நம்மை கஷ்டத்தில் தள்ளினர். நம் நாட்டைக் கையகப்படுத்தி அடக்கு முறையை கையாள முயற்சித்தனர். இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. 1906 ஆம் ஆண்டு, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாதாபாய் நேரோஜி அவர்கள், ஆங்கிலேயரின் கொடியை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த கூட்டத்தில் ஒரு பங்காளராய் திகழ்ந்தவர் தான் பிங்கலி வெங்கையா என்பவர். அடுத்து சில நாள்களிலே இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.

வெங்கையாவிற்கு கிடைத்த வாய்ப்பு

வெங்கையாவின் இந்த ஆர்வத்தைக் கண்ட மகாத்மா காந்தி, பெசவாடா என்ற இடத்தில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற சமயத்தில், அவரைக் கொடியை வடிவமைக்க சொல்லி கேட்டுக் கொண்டார். இதற்கு வெங்கையாவிற்குக் கொடுத்த அவகாசம் 3 மணி நேரம் மட்டும் தான். இந்த குறிப்பிட்ட காலத்தில் கொடியை உடனே வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

கொடியில் நிறம் உணர்த்துபவை

இவ்வாறு வெங்கையா செய்த கொடியில் சிவப்பும், பச்சை வண்ணமும் கலந்திருந்தது. இந்த கொடியில் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் வெள்ளிய நிறத்தைத் தேர்ந்தெடுத்தார் காந்தி. மேலும், கொடியின் நடுவில் கைத்தறி சக்கரம் சேர்க்கப்பட்டது. கொடியின் நடுவில் வைத்த இந்த கைத்தறி சக்கரம் நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் சின்னமாக விளங்க குறிப்பிடுகின்றனர்.

அதன் படி, இந்தியாவின் முதல் கொடியை, சிரிஷ் சந்திர போஸ் பல வருடங்களுக்கு முன்பே வடிவமைத்தார். இதனைத் தொடர்ந்து நிவேதிதா, மேடம் பிகாஜி போன்றோர் கொடி வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இறுதியில் வெங்கையா வடிவமைத்த கொடி தான் நமது நாட்டின் தேசியக் கொடியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு, தற்போதுள்ள கொடியின் வடிவம் 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.

அதே சமயம், இந்த மூவர்ணக் கொடி இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 15 அன்றே, இந்திய தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாட்டுக்காக மட்டுமே செய்தார்

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்ததற்கு வெங்கையா எந்த வித தொகையையும் பெறவில்லை. வாழ்நாள் முழுவதும் வறுமையிலே நாள்களைக் கழித்தார் வெங்கைய்யா. எண்ணற்ற துயரங்களைத் தாண்டி 1963 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதன் பிறகு, இவருக்கு 2009 ஆம் ஆண்டு, அரசு மிகப்பெரிய கௌரவமாக தபால் தலை வெளியிடது. மேலும், இவரது பெயருக்கு பாரத ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்