Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வேலையின்மை சான்றிதழ் எப்படி பெறுவது? தேவைப்படும் ஆவணங்கள், தகுதி உள்ளிட்ட முழு விவரங்களும் உங்கே..!

Gowthami Subramani August 05, 2022 & 15:25 [IST]
வேலையின்மை சான்றிதழ் எப்படி பெறுவது? தேவைப்படும் ஆவணங்கள், தகுதி உள்ளிட்ட முழு விவரங்களும் உங்கே..!Representative Image.

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி, தமிழக அரசு வேலையில்லாத நபர்களுக்கு உதவும் வகையில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு வேலையின்மை சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த வேலையின்மை சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளையும், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)
  • குடும்ப அட்டை அல்லது ரேஷன் அட்டை (Smart Card)
  • ஆதார் அட்டை (Aadhar Card)
  • கல்வித் தகுதிச் சான்றிதழ் (Education Qualification Certificate)
  • கல்வி இடமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate)
  • குடும்ப வருமானச் சான்றிதழ் (Income Certificate)
  • வேலைவாய்ப்பு அட்டை (Employment Card)

வேலையில்லாதவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகை திட்டம்..!


வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழக அரசின் இ-சேவை இணையத்தில் உள்நுழைய வேண்டும்.
  • அதில் பயனாளர் உள்நுழை என்பதைக் க்ளிக் செய்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதன் பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பிறகு உள்நுழை என்பதைக் க்ளிக் செய்த பின்னர் புதிய பக்கம் தோன்றும்.
  • அந்த பக்கத்தில் Department Wise-ன் கீழ், Revenue Department-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில், நிறைய Services கொடுக்கப்பட்டிருக்கும். அந்த Services-ல் REV-108 Unemployment Certificate என்பதைத் தேர்ந்தெடுத்துக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின், Process என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் பயனர்கள் ஏற்கனவே CAN பதிவு செய்திருந்தால், CAN எண், பெயர், கைபேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்த பின் Search என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு Generate OTP என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அப்போது உங்கள் எண்ணிற்கு OTP வரும். அந்த எண்ணை உள்ளிட்டு Confirm என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு, Proceed என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • CAN எண்ணிற்கு பதிவு செய்யும் போது, நாம் கொடுத்த அனைத்து விவரங்களும் தோன்றும். பின், அதில் தோன்றும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்னர் Submit என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின், புதிய பக்கம் ஒன்று தோன்றும். அந்த பக்கத்தில் Educaional Details, Other Details என்று இருக்கும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்த பின் Submit என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணத்தின் நகலை ஸ்கேன் காப்பியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)

குடும்ப அட்டை அல்லது ரேஷன் அட்டை (Smart Card)

ஆதார் அட்டை (Aadhar Card)

கல்வித் தகுதிச் சான்றிதழ் (Education Qualification Certificate)

கல்வி இடமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate)

குடும்ப வருமானச் சான்றிதழ் (Income Certificate)

வேலைவாய்ப்பு அட்டை (Employment Card)

Self Declaration of Applicant Mandatory (விண்ணப்பதாரரின் சுய அறிவிப்பு கட்டாயம்) Form-ஐ தரவிறக்கம் செய்த பின், அதில் பயனர்களின் கையொப்பம் இட்டு அதில் Scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • பின்னர், அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகு Make Payment என்பதைக் க்ளிக் செய்து ரூ.60 கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • இவ்வாறு செய்த பிறகு, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியரிடம் இருந்து நீங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தொலைபேசி எண்ணிற்கு தகவல் வரும்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு இ-சேவை மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் மீண்டும் Login செய்து வேலையின்மை சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஆன்லைனிலேயே சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்…! ரூ.60 மட்டும் போதும்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்