Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IT Job Vacancies 2022: ஐடி நிறுவனங்களில் உருவாகும் 5 லட்சம் வேலைவாய்ப்பு… அதுவும் ஃப்ரெஷர்ஸ்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு…!

Gowthami Subramani May 18, 2022 & 12:25 [IST]
IT Job Vacancies 2022: ஐடி நிறுவனங்களில் உருவாகும் 5 லட்சம் வேலைவாய்ப்பு… அதுவும் ஃப்ரெஷர்ஸ்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு…!Representative Image.

IT Job Vacancies 2022: இந்தியாவில் ஐ.டி துறை அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால், பல்வேறு தொழில்நுட்பங்கள் நாட்டில் முன்னிலை வகிக்கிறது. கல்லூரி படிப்பு முடித்த பிறகோ, அல்லது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதோ, மாணவர்கள் ஐடி சேவையில் பணிபுரிவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

லட்சக்கணக்கிலான வேலை வாய்ப்புகள்

மேலும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் புதிய துறைகள் ஐடி நிறுவனங்களைச் சார்ந்து இயங்குகின்றன. இதன் அடிப்படையில், ஐடி சேவை நிறுவனங்களால், கிட்டத்தட்ட 5,00,000 அளவிலான புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது (TCS Job Vacancies 2022).

Infosys நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு…! ஸ்டார்டிங் சம்பளமே எவ்வளவு தெரியுமா..?

முதன்மை நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஐடி துறையில், முதன்மையான பங்கு வகிப்பதில், டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், டெக் மகேந்திரா மற்றும் மைன்ட் ட்ரீ நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும், இதனைத் தொடர்ந்து Accenture, Capgemini, IBM, Oracle உள்ளிட்ட நிறுவனங்களும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிக்கக் காத்திருக்கின்றனர். மேலும், இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் அதிகபட்சமாக அதாவது 90% அளவிலான வேலைவாய்ப்புகள் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது (Accenture Job Apply Online).

அதன் படி, பிற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து 1,60,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஐடி சார்ந்த நிறுவனங்களில் 50,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவ்வாறு, இந்திய நிறுவனங்களில் 3,00,000 அளவிலான புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான சம்பளத்தில் டெக் மகேந்திரா நிறுவனத்தில் வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க…

டிஜிட்டல் முறை பயன்பாடு

அதிலும், இந்தக் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் பெரும்பாலும் எல்லா விதமான பயன்பாடுகளும் டிஜிட்டல் முறையைப் பின்பற்றி செயல்படுகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்ப வசதிகளைச் சார்ந்து அமைவதால், சேவைகளை மேம்படுத்திய வண்ணம் அமைந்துள்ளது. மேலும், இதன் முக்கிய அம்சமாக எந்த வித முன் அனுபவமும் இல்லாத Freshers-களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது (Infosys Job Opportunities).

கொரோனா தொற்றினால், பெரும்பாலான செயல்பாடுகள் முடங்கிய நிலையில், ஐடி துறையில் அதிக அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இது போல டிஜிட்டல் சேவை பயன்பாடு இன்னும் அதிகமாவதால், தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் மேம்படும் எனக் கருதப்படுகிறது. வேலை தேடும் அனைவரும், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பினைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

IT துறையில் அருமையான வேலை…! அதுவும் உங்களுக்கு பிடித்த கம்பெனியில…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்