ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாஉப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக அல்லது நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம், முகாம் குறித்த பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.
முகாம் அமைப்பாளர்கள்
பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில், படித்து முடித்த வேலைவாய்ப்பு தேடும் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் விதமாக, இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைகிறது. இந்த முகாம் ஆனது, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான திரு.சு.முத்துசாமி மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்ரும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி. கணேசன் ஆகியோரது தலைமையில் நடைபெற உள்ளது.
கல்வித் தகுதி
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சேர விருப்பமுள்ளவர்கள், 8-ஆம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி / +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ / முன் அனுபவமுள்ள படித்த, படிக்காத ஓட்டுநர்கள், டெய்லர்கள் / வெல்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள் / மெக்கானிக் / செக்யூரிட்டி / அக்கௌன்டன்ட் / ஆபிஸ் அசிஸ்டன்ட் போன்றோர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமின் சிறப்பம்சங்கள்
✤ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பாக அரசு வேலைக்கான இலவச போட்டித் தேர்வுக்கு முன் பதிவு செய்தல்
✤ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு
✤ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு
✤ மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள்
✤ மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள்
பங்குபெறுபவர்களின் விவரங்கள்
200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.
முகாம் பற்றிய முக்கிய விவரங்கள்
தேதி: ஜனவரி 21, 2023 (சனிக்கிழமை)
நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம்: நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூரபாளையம் பிரிவு, பிச்சாண்டாபாளையம், பெருந்துறை ரோடு, ஈரோடு
முகாமில் கலந்து கொள்ளும் முறை
✤ ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், தங்களது விவரங்களை கீழ்க்காணும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
✤ பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி: https://www.tnprivatejobs.tn.gov.in/
✤ மேலும், முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பதாரர்கள் சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் போன்றவற்றைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
தொடர்பு விவரங்கள்
தொலைபேசி எண்: 0424-2275860
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பதாரர்களுக்கு முகாம் சார்பாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன் படி, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இலவச பேருந்து வசதியை ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை பேருந்து நிலையங்களில் பெறலாம்.
வேலைவாய்பற்றவர்களுக்கு உதவும் வகையில் நடத்தப்படும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறுவீர்.
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…