Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கோடை விடுமுறைக்கு பிறகு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது 2023? | School Reopen Date 2023 in TamilNadu

Nandhinipriya Ganeshan Updated:
கோடை விடுமுறைக்கு பிறகு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது 2023? | School Reopen Date 2023 in TamilNaduRepresentative Image.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டன. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு மற்றும் அடுத்த பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, "கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் திறக்கப்படும். மேலும், அடுத்த ஆண்டில் அனைத்து வகுப்பு மாணாக்கர்களுக்கும் செப்டம்பர் 14 முதல் 27 வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும்.

அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும். 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 19 ஆம் தேதியும் தொடங்கப்படும். அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைபெறும். மேலும், பாட வாரியான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் பள்ளிகளில் நோட்டு, புத்தகம் விநியோகிக்கும் தேதி பின்னர் வெளியிடப்படும்.

2023 - 2024 கல்வியாண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் 217 ஆக இருக்கும். இதற்கிடையில், கோடை வெயில் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், பள்ளிகள் திறப்பதை ஒத்திவைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்