Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த 5 மாவட்ட பள்ளிகள் மட்டும் வரும் 4-ம் தேதி செயல்படும்.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..

Nandhinipriya Ganeshan Updated:
இந்த 5 மாவட்ட பள்ளிகள் மட்டும் வரும் 4-ம் தேதி செயல்படும்.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. Representative Image.

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. மேலும், கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணி திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம், சாரணர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், கல்வி இணை செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களை வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

இந்த வேலை நாளுக்கு பதிலாக வருகின்ற மார்ச் 13 ஆம் தேதி அன்று விடுமுறை தினமாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 13 ஆம் தேதி 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு கிடையாது, அதாவது வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்