Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை… அரசின் முக்கிய அறிவிப்பு.. எப்படி பெறுவது?

Gowthami Subramani October 14, 2022 & 15:10 [IST]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை… அரசின் முக்கிய அறிவிப்பு.. எப்படி பெறுவது?Representative Image.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள், தகுதி, உள்ளிட்டவற்றைக் கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறலாம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் படித்துப் பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெறும் தகுதி

கீழ்க்கண்ட தகுதிகளையுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு தோல்வி அல்லது 10 ஆம் தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் கல்வித் தகுதிகளைப் பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு, மேலே கூறப்பட்ட தகுதிகளைப் பெற்று வேலைவாய்ப்பில்லாமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால், உதவித் தொகை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் இளைஞர்கள், 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியின மனுதாரர்கள் 45 வயது வரை இருக்கலாம்.

உதவித் தொகை விவரங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கீழ்க்கண்ட முறைகளின் படி உதவித் தொகை பெறலாம்.

பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த நபர்கள் – மாதம் ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் – மாதம் ரூ.300/-

மேல்நிலைக் கல்வி பயிலும் நபர்கள் – மாதம் ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் – மாதம் ரூ.600/-

இந்த தொகை காலாண்டிற்கு ஒரு முறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை விவரங்கள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு கீழ்க்கண்ட வகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த நபர்கள் – மாதம் ரூ.600/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் – மாதம் ரூ.600/-

மேல்நிலைக் கல்வி பயிலும் நபர்கள் – மாதம் ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் – மாதம் ரூ.1000/-

குறிப்பு

இந்த திட்டத்தின் கீழ், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும், இத்திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்.

விண்ணப்பிக்கும் முறை

இதில் பயன்பெற உள்ள விண்ணப்பதாரர்கள், உதவித் தொகை விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவதற்கு, வேலை வாய்ப்பு அட்டையினை ஆதாரமாகக் காண்பித்து,”மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம்” மூலம் பெறலாம்.

விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும், இலவசமாக பெறலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய, கீழே கொடுக்கப்பட்ட லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

www.tnvelaivaaippu.gov.in

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும், இந்த உதவித் தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தைச் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்