Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்மை பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கும் 'மைண்ட் ரீடிங்' டெக்னிக் | Mindreader Book Review

Priyanka Hochumin Updated:
நம்மை பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கும் 'மைண்ட் ரீடிங்' டெக்னிக் | Mindreader Book ReviewRepresentative Image.

நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் எல்லாரும் உண்மையாக இருந்தார்கள். மனதில் ஒன்றை வைத்து வார்த்தையில் மற்றதை பேச மாட்டார்கள். ஆனால் காலம் மாற மாற மக்களின் பழக்கவழக்கத்துடன் அவர்களிடம் இருக்கும் உண்மை குணங்களும் மாறிவிட்டது. இப்போது நமக்கு முன் ஒன்றை பேசி, நமக்கு பின் வேற மாறி பேசுகின்றனர். எனவே, நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொண்டால் எவ்ளோ நல்லா இருக்கும். அதாவது சைகை, உடல் தோரணை இவற்றை வைத்து என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம். அதைப் பற்றி தெரிந்துகொள்ள செல்ஃப் டெவெலப்மென்ட் புக்ஸ் நிறைய இருக்கிறது. அதில் இருந்து ஒரு புத்தகத்தில் எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்று பாப்போம்.

புத்தகத்தின் பெயர் - Mindreader

எழுத்தாரர் - David J.Lieberman

பதிப்பகம் - Rodable Books

நம்மை பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கும் 'மைண்ட் ரீடிங்' டெக்னிக் | Mindreader Book ReviewRepresentative Image

ஃபால்ஸ் பாசிட்டிவ் | False Positive

ஒருவரின் Body Language வைத்து கணிக்கக்கூடிய வல்லுநர்கள் - நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் கால்களை சேர்த்துக்கொண்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்தால் அவருக்கு நம்முடைய கருத்தின் மீது ஈடுபாடு இல்லை என்று அர்த்தமாம். அதே போல் நம் கண்ணை பார்த்து பேசாவிட்டால் அதில் உண்மை இல்லை என்று கூறுவார்கள். இதில் எதுவும் தவறில்லை! ஆனால் செயலை விட சூழ்நிலையை கருத்தில் கொண்டு புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர்.

இப்போது குளிரான அறையில் அமர்ந்து பேசும் போது, நமக்கு எதிரே இருப்பவர் கை மற்றும் கால்களை ஒன்றாக சேர்த்து தான் அமர்ந்து இருப்பார். அது குளிரினால், இருப்பினும் பாடி லாங்குவேஜ் வைத்து கருத்தில் ஈடுபாடு இல்லை என்று எடுத்துக்கொள்வோம் அல்லவா. அதே போல கண்ணை பார்த்து பேசவில்லை என்றால் பொய். இப்போ இருக்கும் காலத்தில் கண்ணை பார்த்தே பொய் சொல்லும் அளவிற்கு கற்றுத் தேர்ந்தவர்களாக ஆகிவிட்டனர் நம் மக்கள். இதனை தான் ஃபால்ஸ் பாசிட்டிவ் என்கிறார் ஆசிரியர்.

நம்மை பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கும் 'மைண்ட் ரீடிங்' டெக்னிக் | Mindreader Book ReviewRepresentative Image

எப்படி சொல்றாங்க | Mindreader book review

எனவே என்ன சொல்றாங்கன்னு பார்க்குறது விட, எப்படி சொல்றாங்கன்னு தான் பார்க்கணும். இந்த காலத்தில் நேரில் பார்த்து யாரும் பேசுவது இல்லை. வாட்ஸ்அப் சேட், ஈமெயில், வாய்ஸ் கால் இப்படி நாகரிகம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதில் யார் எதை மனதில் வைத்து பேசுகிறார்கள் என்று கண்டுப் பிடிப்பது மிகவும் கடினம். அதனால் தான் சொல்ல வருவதை பட்டுன்னு சொல்லிட்டார்கள் என்றால் மனதில் இருப்பதை அப்படியே சொல்கிறார்கள் என்று அர்த்தம். இதுவே கொஞ்ச எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் சேர்த்து சொன்னால் பொய்யாக கூறுகிறார்கள் என்று அர்த்தம்.

இப்ப இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லி இருக்கார் ஆசிரியர். உங்களின் அலுவலகத்தில் நீங்கள் ஒரு 'பிரசன்டேஷன்' செய்கிறீர்கள். மீட்டிங் முடிந்த உடன் சக பணியாளர் உங்களிடம் வந்து 'உங்க பிரசன்டேஷன் எனக்கு பிடித்திருந்தது' என்று சொன்னால் அது மனமாரப் பாராட்டுவதாக பொருள். இதுவே 'நைஸ் பிரசன்டேஷன்' அல்லது 'நிறைய ரிசர்ச் பண்ணிருக்கீங்க' என்று எந்த உணர்வும் இல்லாமல் வெறுமனே சொன்னால் அது உங்களை மகிழ்விக்க சொல்ல வேண்டிய வாசகமாகும்.

நம்மை பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கும் 'மைண்ட் ரீடிங்' டெக்னிக் | Mindreader Book ReviewRepresentative Image

இதுக்கு என்ன ரூல் | Self-Development

இதன் மூலம் நமக்கு தெரிய வருவது சந்தோசம், துக்கம், கோவம் இப்படி எந்த உணர்ச்சியாக இருந்தாலும் நேரடியாக சொல்லும் போது அது உண்மையாகவும், அதிக அளவிலான வார்த்தைகளை சேர்க்கும் போது அது போலியாகவும் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் உண்மையை சொல்லும் போது குறைவான எனர்ஜியும் பொய்யை கூறும் போது அதிக எனர்ஜியம் தேவைப்படுகிறது என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

இதைப் போல பல உதாரணங்களுடன் நம்மை சுற்றி இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்