Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களே...! மாதந்தோறும் அரசு தரும் ரூ.1500.. எப்படி பெறுவது?

Gowthami Subramani September 08, 2022 & 14:55 [IST]
மாணவர்களே...! மாதந்தோறும் அரசு தரும் ரூ.1500.. எப்படி பெறுவது?Representative Image.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையில், நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது தமிழக அரசு. சமீபத்தில், பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அவர்களின் மேற்படிப்பிற்காக உதவும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில், திறனறிவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.

அதன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான திறனறிவுத் தேர்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்வின் பாடத்திட்டம், 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். மேலும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த திறனறிவுத் தேர்வுக்கு வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறக் கூடிய 1500 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர். 1500 பேரில், 750 பேர் மாணவர்கள் மற்றும் 750 பேர் மாணவிகள் என்ற கணக்கில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கே ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்