Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு?

Nandhinipriya Ganeshan Updated:
தமிழகத்தில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு? Representative Image.

இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2 பேர் இந்த வைரஸ் தொற்றால் இறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதுவும் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக தமிழகம் முதலில் உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கவே தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி, அடுத்து ஆண்டு தேர்வை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17 ஆம் தேதியே தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்