Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நீண்ட நாள் எதிர்பார்ப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வரப்போகுது.! | TNPSC Group 4 Result Date

Gowthami Subramani Updated:
நீண்ட நாள் எதிர்பார்ப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வரப்போகுது.! | TNPSC Group 4 Result DateRepresentative Image.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில், இன்னும் அதற்கான முடிவுகள் வரவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் நடத்தப்பட்டது.
 

நீண்ட நாள் எதிர்பார்ப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வரப்போகுது.! | TNPSC Group 4 Result DateRepresentative Image

இந்த தேர்வின் மூலம் 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், 18,36,535 விண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வு எழுதினர்.

ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடித்து, தேர்வாணையம் ஆனது, தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த வித தவறுக்கும் இடம் தராமல், குரூப் 4 தேர்வின் முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்