Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி நோ ரேகிங்… பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு..! மாணவர்கள் இத கட்டாயம் செய்யணும்….

Gowthami Subramani September 19, 2022 & 13:10 [IST]
இனி நோ ரேகிங்… பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு..! மாணவர்கள் இத கட்டாயம் செய்யணும்….Representative Image.

ராகிங்கை கட்டுப்படுத்தும் வகையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் யுஜிசி கமிஷன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கல்லூரிகளில் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்த போதிலும், ராகிங்கை ஒழிப்பதற்கு முடியாமல் இருக்கிறது. எதாவதொரு கல்லூரியில், இன்றும் ராகிங் நடந்து கொண்டு தான் வருகிறது. இதனை முழுமையாகத் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில், இது போன்றவற்ரைக் கட்டுப்படுத்த அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக் கழக மானியக்குழுவிற்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது,

ராகிங்கை தடுப்பதற்கு, அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.

விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

உணவகங்கள், விடுதிகள், கழிவறைகளில் ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டும்.

ராகிங்கிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியும் பொருத்தப்பட வேண்டும்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு மாணவரும், நான் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ததை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள், கல்லூரிக்குப் புதிதாக படிக்க வரும் ஜீனியர் மாணவர்களை (புதுமுக மாணவர்களை) சகோதரத்துவ உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும். இவ்வாறு இயல்பான நிலையிலேயே பழக வேண்டும். ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும்.

இந்த நடவடிக்கைகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்