Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image.

நம் நாட்டின் தேசிய கீதம் பற்றிய வரலாறு நம்முள் எத்தனை பேத்துக்கு தெரியும். எப்படி இந்த பாடல் உருவாக்கப்பட்டது, என்று முதல் இந்த பாடல் இந்திய நாட்டின் தேசிய கீதம் என்று உறுதிசெய்யப்பட்டது உள்ளிட்ட தகவலைப் பற்றி பாப்போம்.

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image

தேசிய கீதம் வரலாறு

"ஜன கண மன" என்னும் தேசிய கீத பாடல் வரிகள், பெங்காலி மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட "பரோடோ பாக்யோ பிதாதா" என்ற கவிதையின் முதல் வரிகளால் இயற்றப்பட்டது. இந்தியாவில் முதன் உதலில் தேசிய கீதம் பாடப்பட்ட நாள் 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாளாகும். அன்று கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் மக்களால் பாடப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்பு 24 ஜனவரி, 1950 ஆம் ஆண்டு "ஜன கண மன"இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தே மாதரம்" தேசிய பாடலாகவும் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. 

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image

பாடும் முறை

இந்தியாவில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் போது "தேசிய கீதம்" பாடப்படுவது வழக்கம். இந்த அப்பாடலை ஒரு நிமிடத்திற்கு மேல் பாட கூடாது. பொதுவாக இந்த கீதத்தை பாடுவதற்கு 52 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் நாம் நம்முடைய தாய் நாட்டிற்கு மரியாதையை செலுத்தி இப்பாடலை பாடும் போது ஆண்டாமல் அசையலாம் நிற்க வேண்டும்.

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image

தேசிய கீதம் பாடல் வரிகள்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாமே ஜாகே,

தவ சுப ஆஷிஷ மாகே,

ஜாஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image

National Anthem Lyrics

Jana-gana-mana-adhinayaka, jaya he

Bharata-bhagya-vidhata.

Punjab-Sindh-Gujarat-Maratha

Dravida-Utkala-Banga

Vindhya-Himachala-Yamuna-Ganga

Uchchala-Jaladhi-taranga.

Tava shubha name jage,

Tava shubha asisa mage,

Gahe tava jaya gatha,

Jana-gana-mangala-dayaka jaya he

Bharata-bhagya-vidhata.

Jaya he, jaya he, jaya he, Jaya jaya jaya, jaya he!

எதனால் முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் பாடப்படுகிறது தெரியுமா? | National Anthem Lyrics in TamilRepresentative Image

தேசிய கீதம் தமிழ் அர்த்தம்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்