Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவுல இத்தனை போலி யுனிவர்சிட்டியா..? யுஜிசி வெளியிட்ட பகீர் அறிவிப்பு…

Gowthami Subramani August 26, 2022 & 18:40 [IST]
இந்தியாவுல இத்தனை போலி யுனிவர்சிட்டியா..? யுஜிசி வெளியிட்ட பகீர் அறிவிப்பு…Representative Image.

யுஜிசி-யின் பகீர் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி இன்று இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் 21 போலி பல்கலைக்கழகப் பட்டியலை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் போலியானது என்பது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மாநிலங்களின் பட்டியல்கள்

டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 மாநிலங்களில் 21 போலியான பல்கலைக்கழங்கள் செயல்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. அதன் படி, பல்கலைக்கழகங்களில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், மற்றும் தொழிற்கல்வி பல்கலைக்கழகம் போன்றவை அடங்கும்.

போலி பல்கலைக்கழகங்கள் (Fake Universities)

யுஜிசி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்ததாவது, யுஜிசி சட்டத்திற்கு முரணாகச் செயல்படக் கூடிய 21 Self-Styled, அங்கீகாரம் பெறாத நிறுவனங்களே தற்போது போலியான பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கோ, பொது மக்களுக்கோ எந்தப் பட்டமும் வழங்குவதற்கான அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் குறித்து யுஜிசி விவரித்தது

பட்டங்களை வழங்குதல் அல்லது வழங்குவதற்கான உரிமை, மத்திய சட்டம், மாகாண சட்டம் அல்லது மாநில சட்டத்தின் கீழ், பல்கலைக்கழகமாக கருதப்படும் அல்லது சிறப்பு நிறுவனத்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தால் பயன்படுத்த முடியும்.

மேலும், எந்த ஒரு பட்டத்தையும் வழங்கவோ அல்லது வழங்குவதற்கான உரிமையோ தனக்கோ அல்லது தானே வழங்கவோ கூடாது.

இவ்வாறு நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தவிர, வேறு எந்த நிறுவனமும் “பல்கலைக்கழகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த தடை செய்கிறது.

யுஜிசி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்

டெல்லி மாநிலத்தில்

1. அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம் (AIIPPHS), மாநில அரசு பல்கலைக்கழகம்

2. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், டெல்லி

3. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது தில்லி

4. அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)

5. கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட். தர்யாகஞ்ச், டெல்லி

6. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்

7. ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம்

8. தொழிற்கல்வி பல்கலைக்கழகம், டெல்லி

உத்திரபிரதேசம்

9. பாரதிய சிக்ஷா பரிஷத்

10. தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர்

11. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத் (உ.பி.)

12. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்)

ஒடிசா

13. வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

14. நபபாரத் சிக்ஷா பரிஷத்

மேற்கு வங்காளம்

15. மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

16. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம்

மகாராஷ்டிரா

17. ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்

கேரளா மாநிலம்

18. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம்

கர்நாடகா

19. படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம்

ஆந்திரப்பிரதேசம்

20. கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் பல்கலைக்கழகம்

புதுச்சேரி

21. ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

UGC Approved University List 2022 | UGC Fake University List 2022 PDF | List of 44 Universities BlackListed in India | List of Fake University in India 2022 | Fake University List in India | AICTE Fake University List | List of Fake University in India PDF | List of Fake Universities in India by UGC | Latest Fake University List by UGC | Fake University List in UGC | Fake Universities by UGC | UGC ac in Fake University List | List of Fake University in India | Fake University List 2022 | Fake University in India 2022 | UGC Fake University List 2022 PDF

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்