Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

UPSC Results 2021 Topper List: UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா..? முதல் மூன்று இடங்களையும் பிடித்த பெண்கள்….!

Gowthami Subramani May 30, 2022 & 15:55 [IST]
UPSC Results 2021 Topper List: UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா..? முதல் மூன்று இடங்களையும் பிடித்த பெண்கள்….!Representative Image.

UPSC Results 2021 Topper List: 2021 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில், முதல் மூன்று இடங்களையுமே பிடித்தவர்கள் பெண்களே ஆவர்.

ஆண்டு தோறும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் திறன்களின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். இதில் மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்பெறுகின்றன (UPSC Results 2021 Topper List).


Representative Image. ஷேர் மார்க்கெட்-ல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா..? அப்ப மொதல்ல இத செக் பண்ணுங்க…..


தேர்வு நடைபெற்ற நாள்

யுபிஎஸ்சி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் சில தினங்களிலேயே வெளிவந்தது (UPSC CSE Results 2022). மேலும், UPSC-க்கான முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் நாள் முதல் 16 ஆம் நாள் வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதம் 17 ஆம் தேதி வெளியாகின (UPSC Results 2022). மேலும், அதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் முதல் மே 26 ஆம் நாள் வரை தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான இறுதிக்கட்டமாக, மே மாதம் 30 ஆம் நாள் UPSC-ன் இறுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது (UPSC Exam Results 2022).

தேர்வு முறை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக் கூடிய UPSC தேர்வில், இளங்கலைப் பட்டம் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (UPSC Results 2021).

இதில் விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு வைக்கப்படும். இவ்வாறு, மூன்று நிலைகளிலும், வைக்கப்படும் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் இவர்களின் திறன் ஆகியவற்றைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃபெஸ், குரூப் ஏ, குரூப் பி போன்ற பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேர்வு முடிவுகள்

இன்று வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளைக் காண, https://upsc.gov.in/ என்ற இணையத்தைக் க்ளிக் செய்ய வேண்டும் (UPSC Final Results 2021).

பின், அதில் UPSC Civil Service Final Result 2021 என்ற பக்கத்தைக் க்ளிக் செய்ய வேண்டும். PDF வடிவில் இருக்கும் பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

அதன் படி, கடந்த ஆண்டில் 172 காலிப்பணியிடங்கள், 2020-ல் 796, 2019 ஆம் ஆண்டில் 896, மற்றும் 2018-ல் 782 காலிப்பணியிடங்கள் இந்த சிவில் சர்வீஸஸ் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டது. மேலும், இந்த 2022 ஆம் ஆண்டில் 861 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டன.

தேர்வு முடிவுகள்

அதன் படி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது. மேலும், இதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக UPSC அறிவித்துள்ளது.

இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட முடிவில், தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தமிழக அளவில், ஸ்வாதி ஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்தும், தேசிய அளவில்42 ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும், இந்த முறை தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேரும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், IAS, IPS, IFS மற்றும் மத்திய அரசின் A மற்றும் B பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்