Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai News Today : கீழடியில் கிடைத்த 30 முதுமக்கள் தாழிகள்..? தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி..!

Muthu Kumar May 17, 2022 & 12:35 [IST]
Madurai News Today : கீழடியில் கிடைத்த 30 முதுமக்கள் தாழிகள்..? தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி..!Representative Image.

Madurai News Today : மதுரை அருகே கீழடியில் நடைபெற்று அகழாய்வில் 30 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

கீழடி

மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே மிகப்பெரிய அளவில் இங்கு தான் நடைபெற்றது. இதில், 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளதாக வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அகழாய்வு பணி 

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் 5 கட்ட அகழாய்வு கீழடியில் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், தொன்மையான மனிதர்களின் இன மரபியல், வாழ்வியல் முறையை அறியும் வகையில் 6ஆம் கட்ட அகழாய்வு, கீழடியில் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

முதுமக்கள் தாழி

இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகையில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 30 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வை விட தற்போது நடந்து வரும் அகழாய்வில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்