Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக மக்களே உஷார்; சீனாவில் இருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி! 

KANIMOZHI Updated:
தமிழக மக்களே உஷார்; சீனாவில் இருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி! Representative Image.

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மற்றும் 6 வயது குழந்தைக்கு பிஎஃப் 7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

சீனா, ஜப்பான், டென்மார்க், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தீயாய் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸின் மாறுபாட்ட வைரஸ் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் மதுரை வந்தனர்.

இந்நிலையில் சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயனியிடம் கொரணத் தோற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மதுரை வந்த 39 வயதான பிரதிபா என்ற பெண்மணி மற்றும் அவரது மகள் பிரித்தியங்காரரிகா என்ற 6 வயது பெண் குழந்தைக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரானதொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தாய் மற்றும் குழந்தையை அனுமதித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தன்மைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தையும் சேர்ந்து இருந்துள்ளனர்.

தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளதால், அவரது மனைவி, குழந்தையுடன் தமிழகம் திரும்பியுள்ளார்.  இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை விமானத்தில் பயணித்த 70 பயணிகளையும் பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்