Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துமஸை முன்னிட்டு கிடுகிடு உயர்வு; மல்லிகை பூ விலை என்னத் தெரியுமா? 

KANIMOZHI Updated:
கிறிஸ்துமஸை முன்னிட்டு கிடுகிடு உயர்வு; மல்லிகை பூ விலை என்னத் தெரியுமா? Representative Image.

நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளதால் மதுரை மாட்டுத் தாவணியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட கிறிஸ்துவ மக்கள் தயாராகி வருகின்றனர். பண்டிகை காலம் என்றாலே மலர் விலை உயர்வது வழக்கம், அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணியில் இன்று மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 

மல்லிகை பூ கிலோ  2,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,300 ரூபாய்க்கும்,  முல்லைப் பூ 1,500 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும்,  
பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 70 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

நேற்று மதுரை மல்லிகை பூ கிலோ 1500 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், குளிர் காலம் என்பதால் மதுரை மல்லிகை பூவின் வரத்து குறைந்தும், பண்டிகை காலம் என்பதால் தேவைவை அதிகாரித்து இருப்பதுமே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்