Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைப்பொங்கல் நெருங்குது; மதுரையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

KANIMOZHI Updated:
தைப்பொங்கல் நெருங்குது; மதுரையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்! Representative Image.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி இயற்கை முறையில் மண்ட வெல்லம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தான்.  இந்த புகழ் வரிசையில் தற்போது இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்டவெல்லமும் சேர்ந்துள்ளது. அலங்காநல்லூர் பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தக் கரும்பு விவசாயிகள் தங்கள் விளை நிலப் பகுதியிலேயே ஆலைக் கொட்டைகள் அமைத்து சொந்தமாக மண்டவெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தைப்பொங்கல் நெருங்குது; மதுரையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்! Representative Image

அதன்படி அலங்காநல்லூர் பகுதியில் மெய்யப்பன்பட்டி, கோட்டைமேடு, கல்லனை, புதுப்பட்டி, கொண்டையம்பட்டி ஒட்டுப்பட்டி என பல்வேறு கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட ஆலைக் கொட்டகை அமைத்து மண்டவெல்ல தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

  இப்பகுதியில் தயார் செய்யப்படும் மண்டவெல்லம் எந்தவித வேதிப்பொருட்கள் சேர்மானம் இன்றி இயற்கையான முறையில் கரும்புச் சாறு எடுத்து அதனை கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைத்து, பாகு தயாரித்து பின்னர் சர்க்கரையாக்கி அதனை உருண்டை பிடித்து தயாரிக்கப்படுவதால் கேரளா, கர்நாடகா ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இப்பகுதியில் தயாரிக்கப்படும் பச்சை மண்ட வெல்லத்திற்கு மவுசு அதிகம்.

    

 

    

தைப்பொங்கல் நெருங்குது; மதுரையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்! Representative Image

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தைப்பொங்கல் நெருங்கி வருவதை ஒட்டி மண்டவெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது, இதனால் இப்பகுதியில் மண்டவெல்லம் தயாரிப்பு பணி என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு ஒரு ஆலைக் கொட்டகையில் சுமார் 600 கிலோ மண்டவெல்லம் தயார் செய்யப்பட்டு இங்கிருந்து மதுரை வெல்ல மண்டிக்கு அனுப்பப்படுகிறது, அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    

 

தைப்பொங்கல் நெருங்குது; மதுரையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்! Representative Image

தற்போது மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்தும் மண்டவெல்லத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான மண்ட வெல்லம் தற்போது 45 ரூபாய் வரை விலை போவதாக தெரிவிக்கும் விவசாயிகள் பொங்கல் நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன்  நாள்தோறும் மண்டவெல்லத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்