Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Non-Veg Only: 150 ஆடுகள், 1500 கிலோ அரிசி; ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ திருவிழா!

KANIMOZHI Updated:
Non-Veg Only: 150 ஆடுகள், 1500 கிலோ அரிசி; ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ திருவிழா!Representative Image.

மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற மெகா கறி விருந்து திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பப்பட்டியில் அமைந்துள்ளது கரும்பாறை முத்தையா சுவாமி கோயில். இக்கோயிலில் கோபுரமோ, சிலையோ கிடையாது. அங்குள்ள பாறையையே மக்கள் கடவுளாக வழிபாட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பெளர்ணமிக்கு மறுநாள் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது 150 ஆடுகள், 1500 கிலோ அரிசி கொண்டு நள்ளிரவில் கறி விருந்து சமைத்து ஆயிரக்கணக்கான ஆண்கள் ஒன்று கூடி சாப்பிட்டுள்ளனர். 

அனுப்பப்பட்டி, கரடிக்கல், சொரிக்காம்பட்டி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் காலை 8 மணி முதலே கோயிலில் குவிய ஆரம்பித்தனர். ஆண்கள் மட்டுமே இந்த கறி விருந்து சாப்பிடுகிறார்கள்.   பெண்கள் இந்த கறி விருந்தில் பங்கேற்பதில்லை.

ஆண்கள் சாப்பிடும் இலைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். காலப்போக்கில் அந்த இலைகள் கருகி, தானாக மறைந்துவிடும் என்ற ஐதிகமும் இந்த கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்