Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Local News : மதுரை மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் :- அமைச்சர் தகவல்.

Muthu Kumar May 20, 2022 & 12:45 [IST]
Madurai Local News : மதுரை மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் :- அமைச்சர் தகவல்.Representative Image.

Madurai Local News : மதுரையில் நெல்பேட்டை - அவனியாபுரம் இடையே மேம்பாலம் கட்டுமாண பண்கள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்தார். 

ஆலோசனைக் கூட்டம்

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் கலெக்டர் அனிஷ் சேகர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டுனர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அமைச்சர் எ.வ.வேலு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 30 சதவீத விபத்துக்களும், மாநில நெடுஞ்சாலைகளில் 33 சதவீத விபத்துக்களும் நடப்பதாக தெரிவித்தார்.

விபத்து

மேலும், 2021-ம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்தில் 6,223 பேரும், கார் விபத்துகளில் 2,467 பேரும், லாரி போன்ற சரக்கு வாகன விபத்துகளில் 2,144 பேர், அரசுப் பஸ் விபத்துகளில் 647 பேர், தனியார் பஸ் விபத்துகளில் 302 பேர், ஆட்டோ விபத்துகளில் 323 பேர், வேன் போன்ற சுற்றுலா வாகன விபத்துகளில் 1,140 பேர், பிற வாகன விபத்துகளில் 1,666 பேர் என மொத்தம் 14,912 நபர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2,282 விபத்துகள் ஏற்பட்டு 707 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேம்பாலம் 

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். மதுரை சுற்றுச்சாலை சிவகங்கை சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பஸ் நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை முதல் அவனியாபுரம் சாலை சந்திப்பு பெரியார் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. 

புதிய திட்டம் 

திண்டுக்கல் மேம்பாலத்தில் இருந்து சமயநல்லூர் நான்கு வழிச்சாலை வரை புதிதாக சாலை அமைக்க 100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரை வைகை கரையின் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 3 இடங்களில் சாலை பணிகள் தடைப்பட்டு இருப்பதாக கோ.தளபதி எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு இந்த சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும் என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்