Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Live News : பாசஞ்சர் ரெயில் இயக்கம்..? ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு 30-ந் தேதி முதல் இயக்கம்..!

Muthu Kumar May 19, 2022 & 15:25 [IST]
Madurai Live News :  பாசஞ்சர் ரெயில் இயக்கம்..? ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு 30-ந் தேதி முதல் இயக்கம்..!Representative Image.

Madurai Live News : மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு வருகிற 30-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 

பாசஞ்சர் ரெயில்

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூர் செல்ல வசதியாக எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இது வருகிற 30-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு 

கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு உள்ளதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. மேலும் ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. 

அதிக கட்டணம்

கொரோனா பரவல் காரணமாக பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் இணைப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் பலமுறை புகாரளிக்கப்பட்டது. 

ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறந்துள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனைதொடர்ந்து பாசஞ்சர் ரெயில்களை தவிர பிற ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. 

ரெயில்வே நிர்வாகம்

இந்நிலையில், மறைமுக கட்டண உயர்வுடன் ரெயில்கள் இயக்கப்படுவதாகவும் அவற்றை பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரெயில் இயக்கப்பட வேண்டுமா..? கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா..? என ரெயில்வே நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராமேசுவரம் 

இந்தநிலையில், மதுரை கோட்டத்தில் உள்ள பாசஞ்சர் ரெயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு வருகிற 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.  

ராமேசுவரம் ரயில்

ராமேசுவரம் சென்ற இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் ரயில்

திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயில் வருகிற 30-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும். 

நெல்லை வந்தடைந்த இந்த ரயில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் வந்தடையும்.  

செல்லும் வழி

திருச்செந்தூர் ரயில், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளைங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் 10 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

செங்கோட்டை ரயில்

நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு வருகிற 30-ம் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் வந்தடையும். 

செங்கோட்டை வந்தடைந்த ரயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வருகிற 31-ம் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, செங்கோட்டை ரயில் செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும். 

செல்லும் வழி

செங்கோட்டை ரயில், நெல்லை டவுன், பேட்டை, சேரன்மாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் 14 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்