Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,862.02
-125.01sensex(-0.17%)
நிஃப்டி22,138.45
-62.10sensex(-0.28%)
USD
81.57
Exclusive

Elfin நிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி போராட்டம் - தள்ளு முள்ளுவால் பரபரப்பு!

Baskaran Updated:
Elfin நிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி போராட்டம் - தள்ளு முள்ளுவால் பரபரப்பு!Representative Image.

மதுரை: Elfin மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தள்ளு முள்ளு பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்  ELfin நிறுவனமானது இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மதுரை, திருச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள், ஓய்வூதியா்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ஒரு மடங்கு பணம் செலுத்தினால் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு 5 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக கூறியும், பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த ELFIN என்கிற நிதி நிறுவனத் தலைவர்களான அழகர்சாமி, பாபு, ராஜப்பா, இளங்கோ, ராம், சாகுல் ஹமீது, ரமேஷ், அறிவுமணி ஆகியோரை கைது செய்ய கோரியும் பொதுமக்களின் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்ப பெற்று தர கோரியும் ஆதி தமிழர் கட்சி நிறுவன தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ELfin நிதி நிறுவனத்தின் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப் பிரிவிலிருந்து (E.O.W) சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கோரியும், மேற்கண்ட குற்றவாளிகள் புதிதாக தொழில்கள் துவங்கிட அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக  கோரிக்கைகள் விடுத்தும், ELfin நிதி் நிறுவனத்தை தடை செய்ய கோரியும் கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி சென்றனர்.

இது குறித்து பேசிய நிறுவன தலைவர் கு.ஜக்கையன் பேசுகையில், 5கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ELPIT நிதி நிறுவனத்தின் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப் பிரிவிலிருந்து (E.O.W) சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும், பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தை திரும்ப ஒப்படைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்