Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உச்சநீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..! உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா பேட்டி…

Chandrasekaran Updated:
உச்சநீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..! உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா பேட்டி…Representative Image.

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி சின்னசாமியை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என சங்கரின் மனைவி கவுசல்யா தெரிவித்துள்ளார்.

மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் மற்றும் உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறியதாவது:

"2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார், 2017 ஆம் ஆண்டு சங்கர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, 2020 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு சின்னசாமி விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, சங்கரின் மனைவி கவுசல்யா, சங்கரின் தம்பி விக்னேஷ்வரன் சார்பில் வழக்கு தொடுத்தனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கவில்லை. தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளில் 6 ஆணவக் கொலை வழக்குகளில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து சங்கரின் மனைவி கவுசல்யா கூறுகையில் "உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் உள்ளது. வழக்கு கிடப்பில் போடப்பட்டது பாதிக்கப்பட்டவர் என்கிற தரப்பில் மனதுக்கு வேதனையாக உள்ளது. சங்கர் படுகொலை வழக்கில் உறுதுணையாக இருப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு வர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்,  என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்