Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thalaivar 169 நெல்சன் செய்த வெறித்தனம்...! வேற லெவல்ல உருவாகும் ஜெய்லர் படம்! | Jailer update Muthuvel Pandian arrives

UDHAYA KUMAR Updated:
Thalaivar 169 நெல்சன் செய்த வெறித்தனம்...! வேற லெவல்ல உருவாகும் ஜெய்லர் படம்!  |  Jailer update Muthuvel Pandian arrivesRepresentative Image.

கார்த்திக் சுப்புராஜ் போல,  பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்து கண் முன் நிறுத்தியிருக்கிறார் நெல்சன் என ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றனர் அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும். வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளில் அவர்கள் தற்போது  நடித்து வரும் படத்தின் அப்டேட் கொடுப்பது என்பது எழுதப்படாத விதி, தொன்றுதொட்டு நடந்து வரும் சாஸ்திரம். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே சொல்லப்போனால் நள்ளிரவே அறிவித்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

வழக்கமாக முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடாமல் திடீரென்று அப்டேட் விட்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் சன்பிக்சர்ஸ் இன்று அதிகாலை முதலே ரசிகர்களை காக்க வைத்தது. நெல்சன் திலீப்குமாரின் படம் என்பதால் கோலிவுட்டின் அத்தனை நடிகர்களின் ரசிகர்களும் காத்திருந்தனர். 

மாலை 6 மணி ஆகாத குறைதான், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு விருந்தாக வந்து இறங்கியது ரஜினிகாந்த் தோன்றும் டீசர். வேற லெவல்..வேற லெவல் அட்டகாசம் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவிட்டனர். 


கசங்கிப் போன சட்டை, புட்டி கண்ணாடி போட்டு அடக்கமான முக பாவனை காட்டினாலும், கடைசியில் கையில் பட்டாகத்தியை எடுத்து வெறித்தனத்தைக் காட்டிவிட்டார். 

தரமான சம்பவம், பேட்டை படத்துக்கு பிறகு ரஜினியின் முதல் இம்ப்ரஷனே மிகப் பெரிய வெற்றி. 

பீஸ்ட் படத்தின்போது நெல்சனை போட்டு அடி வெளுத்தவர்கள் ரஜினி ரசிகர்கள். காரணம் விஜய். ஆனால் இப்போது அவர்களே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இப்படியே படத்தையும் வேற லெவலுக்கு எடுத்து குடுத்துடுப்பா சாமி உனக்கு புண்ணியமா போவும் என பேசி வருகின்றனர் ரசிகர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்