Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு 7 வில்லன்களா? அட இவருமா? | Indian 2 Update in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு 7 வில்லன்களா? அட இவருமா? | Indian 2 Update in Tamil Representative Image.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'இந்தியன் -2' படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு குறை இருக்காது என்பது நமக்கு தெரியும். இந்த படமும் அப்படி தான் எடுக்கப்போகிறாராம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். 25 வருடத்திற்கு பிறகு ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு 7 வில்லன்களா? அட இவருமா? | Indian 2 Update in Tamil Representative Image

சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மும்முரமாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இப்படத்தின் அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

அப்படி ஒரு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்களாம். சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் போன்ற ஏழு நடிகர்கள் வில்லன்களாக நடிக்கிறார்களாம். மேலும், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தனுஷ்கோடி பகுதியில் மிக பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பார்த்திடாத வகையில் இந்தியன் தாத்தா சேனாதிபதி பயங்கர ஆக்ஷன் மோடில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்