Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ajith News Latest: என்னை தல என்று கூப்பிட்ட முதல் நபர் இவர்தான் - பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட தல...!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 23:30 [IST]
Ajith News Latest: என்னை தல என்று கூப்பிட்ட முதல் நபர் இவர்தான் - பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட தல...!!Representative Image.

Ajith News Latest: அஜித்தின் கடைசி திரைப்படம் வினோத் இயக்கத்தில் வெளியான "வலிமை". மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தில் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. அஜித் மற்றும் வினோத், போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்த வலிமை படமும் சொதப்பியதால், தற்போது இந்த கூட்டணி மூன்றாவது படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் AK61 படத்தை மிகவும் நம்பியுள்ளாராம் அஜித் குமார். 

அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த மாதம் துவங்கிவிட்டது. இப்படத்திற்காகவும், ஹேட்டர்ஸ் -க்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இப்படத்தின் கதாநாயகியாக அசுரன் பட ஹீரோயின் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார். இதையும் கடந்த மாதம் தான் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிசெய்தார். 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மகாநதி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இவர் ஆரம்பகாலத்தில் அஜித்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நீண்ட நாட்களுக்கு பிறகு மகாநதி ஷங்கரை அஜித் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தவுடன் பழைய நினைவுகளை அனைவரிடமும் ஷேர் செய்து கொண்டாராம்.

அவ்வாறு, பேசிக்கொண்டிருந்த வேளையில் அஜித் AK61 படக்குழுவிடம், என்னை முதன் முதலில் "தல" (Thala ajith) என்று அழைத்தது மகாநதி ஷங்கர் தான் என நெகிழ்ச்சியாக அனைவரிடமும் கூறினாராம். கடந்த வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த படத்தில் தான் அஜித்தை முதன் முதலில் தல என்று அழைத்தார்கள். மேலும், அப்படத்தில் முதன் முதலில் மகாநதி ஷங்கர் தான் "நீ ஆடு தல" என்று அஜித்திடன் சொல்வார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்