Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலிவுட்டை தெறிக்கவிட்ட உலகநாயகன்! ஹிந்தியிலும் இவ்ளோ மாஸா?

UDHAYA KUMAR May 19, 2022 & 14:09 [IST]
பாலிவுட்டை தெறிக்கவிட்ட உலகநாயகன்! ஹிந்தியிலும் இவ்ளோ மாஸா?Representative Image.

தமிழ் சினிமா, மலையாள சினிமா, தெலுங்கு சினிமா மட்டுமல்ல, பாலிவுட்டையும் தெறிக்க விட்டு தான் திரும்பி வந்துள்ளார் நம்ம உலகநாயகன். அவர் நடித்த மாஸ் திரைப்படங்களை இந்த பதிவில் காண்போம். 

மற்ற நடிகர்களைப் போல தமிழில் நடித்து அதை ஹிந்தியில் டப் செய்து கிடைத்த வெற்றியல்ல, பாலிவுட் நடிகர்களுக்கு போட்டியாக, பாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து என பல வெற்றிகளை அதுவும் சில்வர் ஜூப்ளி வெற்றிகளைப் பெற்றவர் கமல்ஹாசன். வாருங்கள் அவரது வெற்றிப் படங்களின் பட்டியலை காண்போம். 

 

1.ஏக் துஜே கேலியே

கமல்ஹாசனை இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்திய படம் ஏக் துஜே கேலியே.  1981ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியான இந்த படம் ஹிந்தி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது கமல்ஹாசன் வயது 27. கமல்ஹாசனின் 101வது படம் இது. தனது 27வது வயதில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார் கமல். 

மிதுன் சக்ரவர்த்தி, ரிஷி கபூர் ஆகியோருக்கு இணையாக ஒரு தமிழ் நடிகர் பாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார் என அப்போதே ஃபிலிம்ஃபேர் புத்தகத்தில் எழுப்பட்டது. பிரிந்து இருந்து காதலிக்கும் பிரிக்க முடியாத காதல் ஜோடிகளின் கதை. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். 

படம் பயங்கரமான ஹிட். இந்தியில் நம்பர் 1 நடிகர்களுக்கு நிகராக பேசப்பட்டதென்றால் புரிந்துகொள்ளுங்கள். 

 

 

2. சனம் தெறி கசம்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இரண்டாவது ஹிந்தி திரைப்படம். இந்த படத்தை இயக்கியவர் நரேந்திர பெடி.  கமல்ஹாசனுடன் ரீனா ராய், காதர் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  கமல்ஹாசன் நடித்திருப்பதாலேயே மிகப் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் நல்ல ஓடி வெற்றி பெற்றது. 

இந்த படத்தில் வரும் நிஷா நிஷா நிஷா பாடல், அந்த கால காதல் கீதம் போன்றது. இப்பவும் இந்தி பெல்டில் இருக்கும் பல 80ஸ் கிட்ஸ்களுக்கு இந்த பாடல் மிகவும் பிரியமானது. 

 


3 சாகர்

கமல்ஹாசனின் திறமையை அறிந்து கொண்ட ரிஷிகபூர் தனது படத்தில் கமல்ஹாசனையும் நடிக்க அழைத்தார். அதன்படி இப்படி ஒரு ஸ்கிரிப்ட் அமைந்தது. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் சாகர் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற, ஹாட்ரிக் அடித்து பெரிய நடிகராக மாறினார் கமல். 

தான் காதலிக்கும் பெண் இன்னொருவரை காதலிப்பது தெரிந்து தியாகம் செய்யும் இளைஞராக நடித்திருப்பார் கமல். சாதி பிரச்னையால் சேர முடியாமல் தவிக்கும் அவர்களின் காதலை சேர்த்து வைப்பதுதான் கதை.

இந்த படத்தில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கமல்ஹாசனுக்கு கிடைத்தது. 

 

 

4 சத்மா

தமிழில்  எடுக்கப்பட்ட மூன்றாம் பிறை படம்தான் இந்தியில் சத்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நடித்தவர்கள் அப்படியே இதிலும் நடித்தனர்.  இந்த படமும் கமலுக்கு மாபெரும் வெற்றியைக் கொடுக்க, பாலிவுட் நடிகர்கள் பலர் கமல் மீது பொறாமை கொள்ளத் துவங்கினர். 

கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடிப்பில் அசத்தியிருப்பார். 

இதுபோக அபூர்வ சகோதரர்கள் படத்தை அப்பு ராஜா எனும் பெயரிலும், இந்தியன் -ஹிந்துஸ்தானி, அவ்வை சண்முகி - சாச்சி 420 எனவும்  ரீமேக் செய்யப்பட்டது. இந்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் ஆனது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்