Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாபா படம் ஹிட்டா? ஃப்ளாப்பா? - இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
பாபா படம் ஹிட்டா? ஃப்ளாப்பா? - இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?Representative Image.

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் பாபா. இந்த படத்தின் ரிசல்ட் பற்றி இணையத்தில் இருவேறு தகவல்கள் பரவி வருகின்றன. பாபா படம் தோல்வி படம் அல்ல அது சராசரியாக ஓடியது என ரஜினி ரசிகர்கள் இணையதளங்களில் அடித்து விடுகிறார்கள். ஆனால் பாபா படம் வரலாற்றிலேயே ரஜினிக்கு ஏற்படாத தோல்வியைக் கொடுத்த திரைப்படமாகும். 

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றன திரையரங்குகள். காரணம் பாபா ரிலீஸ் ஆகும் திரையரங்குகளிலெல்லாம் ரஜினி ரசிகர்கள் பரபரப்பைக் கூட்டினார்கள். 

எளிய மனிதர்களான ரஜினி ரசிகர்கள் அன்றைய தினம் வேலைக்கு சென்று சம்பாதித்த தங்கள் உழைத்த பணத்தை   அப்படியே எடுத்து செலவிட்டனர். சிலர் பதாகைகள், விளம்பரங்கள் என செலவிட்டாலும் பலர் அதை நல்ல விசயமாகவே மக்களுக்கு செய்தார்கள். ரஜினிகாந்த் போலல்ல ரஜினி ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தில் பல நல்ல உதவிகளைச் செய்வார்கள் என ஊரில் பேசுவார்கள். அப்படி பலரின் சேமிப்புகள் கரைந்து உண்டியல்கள் உடைந்து காசுகளெல்லாம் நல உதவிகளுக்கும், மறைமுகமாகவும் நேரடியாகவும் படத்தின் விளம்பரத்துக்கும் பயன்பட்டது. 

படம் ரிலீஸ் ஆகிறது. காலையில் ஆரவாரத்துடன் திரையரங்குகளை நோக்கி படையெடுத்த ரஜினி ரசிகர்கள் பலர் பாபாவைக் கொண்டாடுகின்றனர்.  12 மணி ஆகிறது. படம் சில நிமிடங்களில் பரபரப்பை இழக்கிறது. படம் எதை நோக்கி போகிறது என்பதே புரியவில்லை. கடைசி வரை தலைவர் அரசியலுக்கு வருவாரா என்பதை காணவே நாங்கள் படத்தை சகித்துக் கொண்டு பார்த்தோம் என வெளிப்படையாக பேசும் அளவுக்கு ரசிகர்களே மனம் புண்பட்டு போயினர். 

இத்தனைக்கும் படம் இரண்டு மூன்று முறை பார்க்கும்போது நன்றாகத்தான் இருப்பதாக தோன்றுகிறது. காரணம் ஃபேண்டஸி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக ஆனது பாபா. ஆனால் விநியோகஸ்தர்கள் வீட்டில் அடுப்பு எரிய வேண்டாமா..? அவர்களின் வயிறு அதைவிட கொழுந்துவிட்டு எரிந்தது. 

படம் வெளியாகி இரண்டே தினத்தில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் ரஜினி. அவர் பயந்து ஓடினாரா என சில அரசியல் கட்சி ஆட்கள் கிளப்பி விட்டனர். அந்த சமயத்தில் எழுந்த பிரச்னைகள் பற்றி தெரிந்திருக்கும். ரஜினியின் எத்தனையோ சுமாரான படங்கள் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன. ஆனால் இந்த படம் தோல்வியடைந்ததற்கு காரணம் அரசியல்தான். 

அவரைச் சுற்றி செய்யப்பட்ட அரசியலும், அவர் செய்த அரசியலும் என இரு தரப்புக்கும் பங்குள்ளது. அன்று முடிவெடுத்த ரஜினி அதன்பிறகு படத்தை தயாரிக்கவே இல்லை. தன் சொந்த மகள் கேட்டும் படம் தயாரிக்காத ரஜினி, மருமகன் ரஜினி தயாரிப்பில் படம் நடித்து கொடுத்து அவரைக் கடனாளியாக்கியது வேறு செய்தி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்