Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் 2-ல் நடிகர் விக்ரம்.. விரிவடையும் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்!

UDHAYA KUMAR Updated:
விக்ரம் 2-ல் நடிகர் விக்ரம்.. விரிவடையும் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்!Representative Image.

கார்த்தி, கமல்ஹாசன், சூர்யாவைத் தொடர்ந்து விஜய், விக்ரம் இருவரும் லோகேஷ் யூனிவர்ஸில் இணைகிறார்களாம். இதனால் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் விரிவடைந்து செல்லப் போகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தை எடுத்தவர் தனது நான்காவது படத்தில் தனது சினிமா ஐகானும் குருவுமான கமல்ஹாசனை இயக்கினார். இந்த படத்தில் கைதி கதைக்களத்தையும் லைட்டாக இணைத்து எல்லா கதையையும் பின்னி பிணைந்ததாக மாற்றினார். இதன்மூலம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற காண்செப்ட் அதிகாரப்பூர்வமாக உருவாகியிருக்கிறது 

அடுத்து தற்போது படப்பிடிப்பு நடத்தி வரும் விஜய் படத்தையும் இதே மாதிரி யூனிவர்ஸ் பாணியில் இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இது கைதி - விக்ரம் யூனிவர்ஸில் வருமா அல்லது வேறு கதையில் வருகிறதா என்பது தெரியவில்லை. 

இந்நிலையில்தான், விக்ரம் படத்தின் இரண்டாவது பாகமான விக்ரம் 2வில் நடிகர் விக்ரமை இணைக்கவிருக்கிறாராம் லோகேஷ். இதன்மூலம் கார்த்தி, கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, விஜய், விக்ரம் என பல நடிகர்களும் ஒரே கதைக்களத்தில் உள்ளே வரவிருக்கிறார்கள். வேற லெவலில் இருக்கப்போகிறது இந்த படங்களின் சீரிஸ். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்