Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

ரேவதி இத்தனை ஹிந்தி படங்களில் நடித்துள்ளாரா?

Udhaya Kumar July 08, 2022 & 13:45 [IST]
ரேவதி இத்தனை ஹிந்தி படங்களில் நடித்துள்ளாரா?Representative Image.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் கதாநாயகி, இயக்குநர்களின் கதாநாயகி ரேவதி ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளது பலருக்கு தெரிந்திருக்கவில்லை.  தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எப்படி கலக்கினாரோ அப்படி ஹிந்தியிலும் ஒரு ரவுண்டு வந்தார். இவர் ஒரு லேடி கமல்ஹாசன் அத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

கணமான கதாபாத்திரங்களிலும் சரி கலாட்டாவான கதாபாத்திரங்களிலும் சரி கச்சிதமாக நடித்து கலக்கிவிடுவார். வாருங்கள் அவர் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 

 லவ் 1991

சல்மான் கான் ஜோடியாக ரேவதி நடிப்பில் வெளியான படம் லவ். இந்த படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. தெலுங்கில் வெங்கடேஷ் - ரேவதி நடித்த இந்த கதைதான் ஹிந்தியில் திரும்ப எடுக்கப்பட்டது. அப்போது 6 படங்களில் தொடர்ந்து வெற்றி கொடுத்து பாலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவானாக மாறியிருந்த சல்மான் கான் ஜோடியாக ரேவதி அவரையே ஓவர் டேக் செய்து நடித்திருப்பார். 

சிறுவயதிலேயே தந்தையைக் கொன்றுவிட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வளர்ந்த பிருத்வி எனும் கதாநாயகனுக்கும் மேகிக்கும் இடையில் ஏற்படும் காதலை மேகி வீட்டில் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பைத் தாண்டி வளர்ந்த காதல் ஒன்று சேர்ந்ததா முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை. 

ராட் 1992

ஹிந்தியில் எந்த கதாநாயகனும் இன்றி தன்னந்தனியாக நடித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையில் பிளாக் பஸ்டர் ஹிட்டை அள்ளியவர் ராம் கோபால் வர்மா. அவரின் ராட், ராத்ரி கதையில் நாயகியாக நடித்தவர் ரேவதி. 1992ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியைச் சுவைத்து இந்த படம். 

முஷ்கூரட் 1992

பிரியதர்ஷன் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான சூப்பர் திரைப்படம் முஷ்கூரத்.  காமெடித் திரைப்படமான இது மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இந்த படம் மலையாளத்தில் ஏற்கனவே மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கிலுக்கம் படத்தின் ரீமேக்தான். 

தர்பான் 1994

ஓம் புரி, ரேவதி, டினா பதக், மனோகர் சிங், மிதா வஷிஷ்ட், ரவி ஜங்கல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தர்பான். 

அவ்ர் ஏக் ப்ரேம் கஹானி 1996

கன்னட மொழியில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கோகிலா திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த அவ்ர் ஏக் ப்ரேம் கஹானி திரைப்படம். இதில் கன்னடத்தில் ரோஜா ரமணி நடித்த வேலைக்காரி கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருப்பார். 

தூப் 2003

போர் குறித்த படமாக அமைந்துள்ள இந்த படத்தில் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கியிருந்தார் ரேவதி. மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார் ரேவதி.  தாமா மனா ஹேய் 2003, அப் தக் சப்பன் 2004, தில் ஜோ பி கஹே 2005, நிஷாபாத் 2007


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்