Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 ஷூட்டிங் எங்க தொடங்குது தெரியுமா?

Udhaya Kumar July 08, 2022 & 12:59 [IST]
தளபதி 67 ஷூட்டிங் எங்க தொடங்குது தெரியுமா?Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வேற லெவலுக்கு ஓடி இன்று ஓடிடியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பும் கடைசி காட்சியில் வரும் நடிகர் சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒரு மாத காலம் தாண்டியும் விக்ரம் படத்தின் மீதான தாக்கம் இன்னும் குறையவில்லை. 

விக்ரம் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அடுத்த படத்துக்கான பணிகளை உடனடியாக தொடங்கும்படியும் ஓய்வின்றி உழைக்கும்படியும் கேட்டுக் கொண்டதாக லோகேஷே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதன்படி விக்ரம் வெற்றி அறிந்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி கொடுத்த பிறகு 3 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு உடனடியாக தளபதி 67 பணியைத் துவங்கிவிட்டாராம் லோகேஷ் 

மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களைப் போலவே இந்த படத்திலும் தனது நண்பரான ரத்னகுமாரையே எழுத அழைத்துள்ளார் லோகேஷ். இருவரும் இணைந்தால் அந்த படம் வேறு லெவலுக்கு மாறும் என்பது மட்டும் உறுதி. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் எங்கு துவங்கவுள்ளது என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. லோகேஷ் அடுத்த வாரம் லொகேஷன் பார்க்க செல்லவிருக்கிறாராம். 

வழக்கமான விஜய் படங்கள் போலல்லாது, இந்த படத்தில் பாடல்களே இருக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது புரமோசனுக்கான பாடல் மட்டும் இருக்கலாம். இந்த கதை கேங்க்ஸ்டருக்கானது என்பதால் இதனை மும்பையிலிருந்து துவங்கலாம் எனும் முடிவில் இருக்கிறார்களாம். இதுமட்டுமின்றி துப்பாக்கி படத்தின் கதையைப் போலவே இதுவும் ஒரு கேட் அண்ட் மவுஸ் திரைக்கதையாக இருக்கப்போகிறது என்றும் மும்பையில் ஆரம்பித்தால் அதேபோல இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்கிற செண்டிமெண்ட்டும் இருக்கிறது தயாரிப்பு தரப்புக்கு. 

தளபதி 66 வாரிசு திரைப்படத்தின் அப்டேட்களே சரியாக இன்னும் வரவில்லை என்பதால் தளபதி 67 பற்றி பேச மறுத்துவிடுகிறார் லோகேஷ். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தளபதி 66, 67 படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்