Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் நடிக்கிறாரா சூர்யா?

UDHAYA KUMAR Updated:
கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் நடிக்கிறாரா சூர்யா?Representative Image.

சூர்யா நடிப்பில் த செ ஞானவேல் இயக்கி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஜெய்பீம். இந்த படத்தை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். சூர்யா போன்ற பெரிய நடிகர்களும் இந்த மாதிரி படத்தில் நடித்தது பாராட்டத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பேசப்பட்ட சூர்யா கேரக்டர் என்றால் ரோலெக்ஸ். கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் வந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் மிரட்டியது. இதனால் தனது நீண்ட நாள் கனவான தனது ஆஸ்தான நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவும் நிறைவேறியுள்ளது. 

சூர்யா கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்திலும் நடிக்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. த செ ஞானவேல் அடுத்து இயக்கப்போகும் படத்தில் இருவரையும் இணைத்து நடிக்க வைக்கத் திட்டமிடுகிறாராம். 

த செ ஞானவேல் எப்போது சமூக கருத்துக்களை வெளிக்கொணரும் வகையிலான கதையையே தேர்ந்தெடுப்பார். இந்த முறை ரஜினிகாந்துக்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யாவுக்கு பொருத்தமானதாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது. 

ஆனால் ரஜினிகாந்த் இதற்கு ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை. ஏற்கனவே அவரது ரசிகரான சிவகார்த்திகேயனை தனது படத்தில் நடிக்க வைக்க அவர் சம்மதிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ரசிகரான சூர்யாவை எப்படி நடிக்க வைப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்