Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷ் படம் வேறு.. கமல் படம் வேறு.. இரண்டும் ஒன்றல்ல!

UDHAYA KUMAR Updated:
தனுஷ் படம் வேறு.. கமல் படம் வேறு.. இரண்டும் ஒன்றல்ல!Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இப்போது கமல்ஹாசனுக்கு பதில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டும் வேறு வேறு படங்கள் என தற்போது தெரியவந்துள்ளது. 

துணிவு படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக அ.வினோத்துடன் இணைந்து அஜித் பணியாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குள் அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியை அறிவித்தார். இந்நிலையில் வினோத் - கமல்ஹாசனை வைத்து இயக்கும் புதிய படத்தை தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். 

ஆனால் அதற்கு மாறாக கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்த பிறகு மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதால் வினோத் படத்துக்கு கொஞ்சம் தாமதமாக பதில் சொல்ல கமல்ஹாசன் முடிவடுத்திருக்கிறார். அதே நேரம் வினோத் இதே கதையை தனுஷுக்கு சொல்லியிருப்பதாக தகவல் வெளியானது. அது தவறான தகவல். 

வினோத், தனுஷ் கூட்டணியில் சதுரங்க வேட்டை படத்தின் பாணியில் ஒரு பெரிய படத்துக்கு திட்டமிட்டிருக்கிறார்களாம். அந்த படத்தையே வினோத் - தனுஷுடன் இணைந்து செய்யவிருப்பதாக இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் இரண்டும் ஒரே படம் இல்லை வேறு வேறு படம் என தெரியவந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்