Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Ajith and vijay அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? விஜய் ஓகே சொன்னாலும் அஜித் சம்மதிக்கணுமே!

UDHAYA KUMAR May 25, 2022 & 19:32 [IST]
Ajith and vijay அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? விஜய் ஓகே சொன்னாலும் அஜித் சம்மதிக்கணுமே!Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் அது விஜய்யும் அஜித்தும்தான். தன்னை இளைய தளபதியிலிருந்து தளபதியாக புரோமோட் செய்துகொண்ட விஜய்யும், தன்னை ரசிகர்கள் தல என்று அழைக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட அஜித்தும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இது சாத்தியமா, விஜய் ஒப்புக் கொண்டாலும் அஜித் சம்மதிப்பாரா என்பதுதான் கேள்வி. 

கமல், ரஜினி கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் விஜய் அஜித் சேர்ந்து நடிக்க துளி கூட வாய்ப்பில்லை என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் கூட ஏற்கும்படியாகத்தான் இருக்கிறது. 

ராஜாவின் பார்வையிலே

1995ம் ஆண்டு விஜய்யை வைத்து ராஜாவின் பார்வையிலே என்கிற படம் எடுக்கப்படுகிறது. அதில் விஜய்க்கு நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவர் தேவை எனும்போது புதுமுக நடிகர் அஜித் அதில் நடிக்கவைக்கப்படுகிறார். கதைப்படி, அஜித் காதலிக்கும் பெண் அவரை ஏமாற்றிவிட துக்கம் தாங்காமல் உடைந்து அழுகும் கேரக்டர். ஆனால் விஜய் மிகவும் தைரியசாலியான கதாபாத்திரம். இப்படி இந்த படம் வெளியானாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எல்லா கிரிடிட்டும் விஜய்க்கே கிடைத்தது.

கடுப்பான அஜித்

பின்னர் மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க அஜித் அழைக்கப்பட்டார். அது நேருக்கு நேர் திரைப்படம். 1997ம் ஆண்டு வசந்த் இயக்கிய இந்த படத்தில் விஜய்யை எதிர்த்து சண்டை போடும் அளவுக்கு அவருக்கு நிகரான ரோல் அஜித்துக்கு கிடைத்தது. இரண்டு பேரும் ஹீரோ எனும் வகையில் அஜித்தும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் டேட் பிரச்னை கால்ஷீட் பிரச்னை என படத்திலிருந்து சில நாட்களிலேயே ஒதுங்கிக் கொண்டுள்ளார். 

நீ வருவாயென 

தேவயானியின் கணவர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாயென திரைப்படத்தில் பார்த்திபன் வேடத்தில் முதலில் நடிக்கவேண்டியிருந்தது விஜய்தானாம். ஆனால் விஜய்க்கு டேட் இல்லாத காரணத்தால் அவ்வளவு பெரிய வேடத்தில் நடிக்க முடியாது. வேண்டுமென்றால் அஜித்தை லீடு செய்ய சொல்லி, எனக்கு கெஸ்ட் ரோல் குடுங்க என்றாராம். ஆனால் அஜித்தோ இல்லை அது ராங். நான் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டாராம். இதனால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது என ராஜகுமாரன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 

மோதல்

இப்படியே இவர்கள் இணைந்து நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தும் அது நழுவி போகவே, கடந்த 10, 15 ஆண்டுகளில் இருவரும் மிகப் பெரிய சூப்பர்ஸ்டார்களாக வந்து நிற்கின்றனர். இருவருக்குள்ளும் ஈகோ இருப்பதாக கோலிவுட்டில் முனுமுனுக்கின்றனர். யார் இறங்கி வருவது என தெரியாமல், இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையாமல் இருக்கிறது. 

இந்நிலையில்தான் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தைப் போல, விஜய் - அஜித்தை வைத்து படம் எடுக்க தயார் என கூறியுள்ளார். இவர் சொல்லி என்ன பிரயோஜனம். மற்ற இருவரும் சம்மதிக்க வேண்டுமே!

இருவரும் சேர்ந்து நடித்தால் யாருக்கு அதிக ஸ்கிரீன்ஸ்பேஸ் கிடைக்கும்? யாருக்கு நெகடிவ் ரோல். ஒருவேளை இருவருக்கும் பாசிடிவ் என்றால் யாருக்கு அதிக பாடல்கள், பாடல்களே இல்லை என்றால் யாருக்கு யார் ஹீரோயின். எல்லாவற்றுக்கும் மேலாக யாருக்கு அதிக சம்பளம். இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்