Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK 62 villain அவரா? இல்லை இவரா? ரெண்டு பேரிடம் பேச்சுவார்த்தை!

UDHAYA KUMAR Updated:
AK 62 villain அவரா? இல்லை இவரா? ரெண்டு பேரிடம் பேச்சுவார்த்தை!Representative Image.

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் எங்கே நடக்கப் போகிறது, எப்போது துவங்கவிருக்கிறது உட்பட AK 62 படத்தின் சில அப்டேட்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு அப்டேட், இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான். 

அஜித்குமார் தற்போது  ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.   வரும் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது துணிவு திரைப்படம். வாரிசு படத்துடன் போட்டி போடுவதால், இம்முறை துணிவு படத்தை மிகப் பிரமாதமாக விளம்பரம் செய்யவேண்டும் என முடிவெடுத்துள்ளது படக்குழு. இந்த படத்தைத் தொடர்ந்து ஓய்வு இன்றி உடனடியாக அடுத்த படத்துக்குள் செல்கிறார் அஜித்குமார். 

 ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தெரியவந்துள்ளது.  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகான நாட்களில் துவங்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் துவங்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.  முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

முக்கியமாக, இந்த படத்தில் அஜித்துக்கு சமமான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். நெகடிவ் ஷேட் இருக்கும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் இது வில்லன் கதாபாத்திரம் என்பதால் தனுஷ் ஒப்புக் கொள்வாரா என்பதுதான் முதலில் தயக்கமாக இருந்ததாம். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் நல்ல நண்பர் என்பதால் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல். ஒருவேளை தனுஷ் இல்லை என்றால் நிச்சயம் விஜய்சேதுபதியிடம் கேட்கலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறதாம் படக்குழு. இதே படத்தில் இன்னொரு நெகடிவ் கதாபாத்திரத்தில் இயக்குநர் கவுதம் மேனன் நடிக்கிறார் என்றும் தகவல் உண்டு

ரஜினி, கமல், விஜய் என்று இவர்களுடன் நடித்துவிட்டு விஜய் சேதுபதி அஜித்துடன் நடிக்கவில்லை என்கிற குறை இருக்கிறது இந்த படத்தின் மூலம் அதுவும் தீர்ந்துவிடக்கூடும் அல்லவா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்