Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த விஜய் டிவி பிரபலங்களின் ரகசிய காதல்?

Nandhinipriya Ganeshan Updated:
வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த விஜய் டிவி பிரபலங்களின் ரகசிய காதல்?Representative Image.

சினிமா பிரபலங்களை போல் இப்போது சீரியல் பிரபலங்களுக்கும் தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் இவர்களை ஏராளமானோர் பின்தொடர்ந்தும் வருகின்றார்கள். இந்தநிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 1 தொடரில் டாக்டர் பாரதியாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் இடம்பிடித்தவர் அருண் பிரசாத். இவருக்கு ஜோடியாக ரோஷினி ஹரிபிரியன் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கென்று தனிப்பெரும் ரசிகர் கூட்டம் இருந்துவந்தது. ஆனால், சீரியலில் இருந்து ரோஷினி விலகியதையடுத்து அவரது கதாபாத்தில் வினுஷா நடித்திருந்தார். இந்த ஜோடியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்குள் சீரியலே முடிந்துவிட்டது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த விஜய் டிவி பிரபலங்களின் ரகசிய காதல்?Representative Image

இந்த சீசனில் அருணுக்கு பதிலாக சன் டிவி ரோஜா சீரியல் பிரபலம் சிபு சூரியன் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக வினுஷா நடித்துவருகிறார். இந்தநிலையில், அருண் பிரசாத்தும் விஜய் டிவியை சேர்ந்த மற்றொரு பிரபலமும் காதலித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வந்தது. அதுவேறு யாரும் இல்லைங்க, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான விஜே அர்ச்சனா தான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த சீரியலில் இருந்து விலகினார். 

வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த விஜய் டிவி பிரபலங்களின் ரகசிய காதல்?Representative Image

இவரும், அருண் பிரசாத்தும் காதலிப்பதாக வெளியான வதந்தி தற்போது உண்மையாகும் விதமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அருண்பிரசாத் சமீபத்தில் சுற்றுலா சென்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், விஜே அர்ச்சனாவும் தான் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பகிர்ந்துள்ள பதிவுகள் ஒரே இடம் என்பது தெரியவந்துள்ளது. இதனால், வதந்தி நிஜமாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவரும் இணைந்துதான் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இவர்கள் காதலிப்பதும் உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்