Tue ,Feb 27, 2024

சென்செக்ஸ் 72,848.41
58.28sensex(0.08%)
நிஃப்டி22,129.00
6.95sensex(0.03%)
USD
81.57
Exclusive

அவதார் 2 படம் எப்படி இருக்கு? | avatar 2 review in tamil

UDHAYA KUMAR Updated:
அவதார் 2 படம் எப்படி இருக்கு? | avatar 2 review in tamilRepresentative Image.

உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி பல கோடி ரூபாய் வசூலை அள்ளிய படங்களில் மிக முக்கியமானது ஜேம்ஸ் கேமரூனின் அவதார். இந்த படத்தை உலகில் பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள். குறைந்தபட்சம் கேள்வியாவது பட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு உலக நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்திய படம் இது. 

Image

இந்த படத்தின் இரண்டாவது பகுதி இந்த மாதம் ரிலீசாக இருக்கிறது.. டிசம்பர் 16ம் தேதி முதல் உலகம் முழுக்க இந்த படத்தை அவரவர் மொழிகளில் கண்டு களிக்கலாம். 

2060 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது.

Image

பிரிமியர் ஷோ ரிவியூ :

அவதார் 2 படத்தின் பிரிமியர் ஷோ நேற்று நடந்துள்ளது. இதில் மிக முக்கியமான நபர்கள் மட்டும் காண வாய்ப்பளித்துள்ளனர். அவர்களில் சிலர் இந்த படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். 

Image

படம் சிறப்பாக இருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்யவுள்ளார் என அந்த விமர்சனங்கள் அமைந்துள்ளது. 

காண்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் தான் இந்த படம். கிளைமாக்ஸ் காட்சியில் இதுவரை காணாத பிரம்மிப்பை உணரவிருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

Image
விமர்சனம் :

இந்த பார்வை அனுபவத்துக்கு பிரமிக்க வைக்கும், அதிவேக அனுபவத்திற்காக 3D வேலை செய்கிறது. CGI அனிமேஷன் மூச்சடைக்கக்கூடிய அளவு மற்றும் துல்லியமான விவரங்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மேலும் மனித வானத்தில்-மக்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட பண்டோராவின் பிற உலக வாழ்க்கை வடிவங்களைக் கொண்ட காட்சிகளின் படைப்பாற்றல் பிரம்மாண்டமாக மனதைக் கவரும் வகையில் உள்ளது, இது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்கள் அதை எப்படி செய்தார்கள்? என கேட்க வைக்கிறது.

சுருக்கமாக சொல்வதென்றால், இது மிகவும் மனதைத் தொடும் கதையாக இருந்தது, அது சில அற்புதமான தருணங்களுடன் சிறிது நேரம் நம் அனைவரது மனதிலும் நிற்கப் போகிறது. ஆனால் நிச்சயமாக, படத்தின் சிறந்த பகுதி பண்டோராவின் உலகமே என பலரால் கூறப்படும். வன காட்சிகள் மீண்டும் அழகாக செய்யப்பட்டுள்ளன, ஆனால் கடல் காட்சிகள் நம் மனதை உலுக்கும். புதிய உயிரினம் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புகள் முற்றிலும் பிரமிக்க வைக்கின்றன, மேலும் ஒவ்வொரு உயிரினமும் மிகவும் அழகாக அனிமேஷன் செய்யப்பட்டு சுற்றுச்சூழலுக்குள் மிகவும் உண்மையானதாகக் காட்டப்பட்டுள்ளது, அவையும் இந்த உலகமும் உண்மையில் இருப்பதைப் போல இருக்கிறது. காடு மற்றும் கடல் உலகம் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெவ்வேறு நீச்சல் பாணிகள் போன்ற சிறந்த நுண்ணிய விவரங்களைக் கொண்டிருக்கின்றன!

கதை :

கதை விரைவில் அப்டேட் செய்யப்படும்

 

அவதார் திரைப்படத்தின் கதை :

ஜேம்ஸ் கேமரூனின் லட்சியத் திரைப்படமாக சொல்லப்படும் அவதார் பிரம்மாண்டத்திலும் சரி, காட்சியமைப்பிலும் சரி ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. 

மிகப்பெரிய வினோதமான கனவு உலகத்துக்குள் நுழைந்துத் திரும்பிய உணர்வை பார்வையாளர்களுக்கு அளித்தது அவதார் திரைப்படம். அந்த திரைப்படத்திலிருந்து சில சுவாரஸ்யமான விசயங்களை மட்டும் பார்க்கலாம்

பெரும்பாலான காட்சிகள் CG எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள். ஆனால் நிஜ உலகில் நடப்பவை போலவே நம் கண்ணுக்கு காட்டப்படுவதில் இருக்கிறது வெற்றி.

அவதார் படத்தில் வரும் போர் விமானங்களும் சரி டிராகன்கள் மற்றும் சில மிருகங்களும் சரி முழுக்க முழுக்க கற்பனையானது. அதை ரசிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.

நம்ம ஊர் பகுதிகள்ல சொல்வாங்க இல்லியா குதிரையை அடக்குனா வீரன்னு அது மாதிரி இங்க டிராகனை அடக்க வேண்டுமாம்.. என்ன ஒரு பிரம்மாண்ட கற்பனை

படத்தில் வரும் ஊரில் காட்டப்படும் தாவரங்கள், தரை பரப்பு, கொடிகள், பூச்சிகள் எல்லாம் மின்னுபவையாகச் சொர்க்கலோகம் போலக் காட்சி தருகின்றது. நிஜத்தில் சொர்க்கம் என்ற ஒன்று இப்படித்தான் வடிவமைக்கப்படவேண்டும்

சில கேமரா காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.  மேலே இருந்து ஜிவ்வென்று கீழு தாறுமாறான வேகத்தில் செல்லும் போது நமது அடிவயிறு ஜிலீர் என்கிறது. இதை அவர்கள் எப்படி படமாக்கியிருப்பார்கள் என்பதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பார்க்கிறேன். 

டிராகன் மீது அமர்ந்து பயணம் செய்தல்,  பயங்கர டிராகன் ஒன்று துரத்தும் போது மரங்களுக்கு இடையே புகுந்து தப்பி செல்வது என அய்யய்யோ மிகப் பிரம்மாண்டமான காட்சிகள்

‘Avatar’ என்ற வார்த்தை இந்தியச் சொல்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்