Wed ,Feb 28, 2024

சென்செக்ஸ் 72,292.59
-802.63sensex(-1.10%)
நிஃப்டி21,931.60
-266.75sensex(-1.20%)
USD
81.57
Exclusive

2k kids பல்ஸை பிடித்த வடிவேலு... நாய் சேகர் எப்படி இருக்கு?

UDHAYA KUMAR Updated:
2k kids பல்ஸை பிடித்த வடிவேலு... நாய் சேகர் எப்படி இருக்கு?Representative Image.

நடிப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்  சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வைகைப் புயல், இப்போது கோலிவுட்டை நோக்கி படையெடுத்து வந்துள்ளது. 2K மேகக்கூட்டங்களைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு திரையரங்குகளில் மையம் கொண்டுள்ள நாய் சேகர் புயல் எப்படி இருக்கு? இந்த பதிவில் விரிவாக காண்போம். 

வடிவேலுவை சரியான டெம்ப்ளேட்டில் மக்களிடையே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் சுராஜ் . இந்த படத்தில் வடிவேலு, பிக் பாஸ் ஷிவானி, திரை விமர்சகர் இட்டிஸ் பிரசாந்த், ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் உட்பட இன்னும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதை 

நாய்குட்டிகளைக் கடத்தி அதை வைத்து வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் நாய் சேகராக நடித்துள்ளார் வடிவேலு. சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய லக்கி நாய் பற்றி தெரிந்து அந்த நாயை மீட்க போராடுகிறார். 

விமர்சனம் 

கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்றாலும், அது சொல்லப்பட்ட விதம், வடிவேலுவின் மேனரிசம், அவரின் பாடி லாங்குவேஜ், டயலாக் என முழு படத்தையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். தான் கதாநாயகன் என்றாலும் எந்த லெவலுக்கும் அடிமட்டம் வரைக்கும் எறங்கி அலசுவோம் என்பது போல டயலாக் காமெடி, பாடி லாங்குவேஜ், சீரியஸ் என கலந்து அடித்திருக்கிறார். 

இதுவரை பல படங்களில் பேசிய வசனங்களையும், அக்மார்க் வடிவேலு ஸ்டைல் ஒன்லைன்களையும் முகத்தை அப்படியே வைத்துக் கொண்டு பேசுவது, மீண்டும் நம்மை குழந்தை பருவத்துக்கு அழைத்துச் செல்கின்றது. இப்போதுள்ள குழந்தைகளையும் ரசிக்க சிரிக்க வைக்கிறது. 

இந்த படத்தில் மற்ற நடிகர்களுக்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி பர்பாஃமன்ஸ் பண்ண விட்டிருக்கிறார் வடிவேலு. ஆனால் படத்தின் இயக்குநர் சுராஜுக்கு பெரிய வேலை கொடுக்கவில்லை. அவரது வேலைகளையும் வடிவேலுவே இழுத்து போட்டு பார்த்திருக்கிறார் போல. அனைத்து டயலாக்குகளும் வடிவேலுவுடையதாகவே நம்ப முடிகிறது.

படத்தில் வடிவேலு, ஆனந்த் ராஜ் அவர்களுடன் வரும் காமெடியன்கள் தவிர வேறு யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இசையும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. வடிவேலு காமெடிகளை அடுத்தடுத்து அடுக்கி பல டயலாக்களை அடித்து விட்டு எடிட் செய்தது போல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். 

முழுக்க முழுக்க வடிவேலுவுக்காக நீங்கள் படம் பார்க்க விரும்பினால் தாராளமாக திரையரங்கில் சென்று காணலாம்.

டிவிட்டர் விமர்சனம்

வைகைப் புயல் வடிவேலு தான் யார் என நிரூபித்திருக்கிறார் என்கிறார் டிவிட்டர் வாசி ஒருவர்

திரை விமர்சகர் இட் இஸ் பிரசாந்த்க்கு நல்ல கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பான காட்சிகள் ஆனால் ஓவர் ஆக்டிங்கால் கொஞ்சம் பிசுறு தட்டியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் ஒருவர். 

படத்தோட கதை பத்தி கவலப்படாம படம் முழுக்க வடிவேலு டயலாக்கையும் முகபாவனைகளையும் ரசிக்கலாம் என்கிறார் ஒருவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்